மலைவாழ் மக்கள் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்
நாமக்கல், ஆக.11- மலைவாழ் மக்கள் சங்க கொல்லி மலை தாலுகா மற்றும் சித்தேரி மலை கமிட்டி மாநாடுகளில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை தாலுகா 11 ஆவது மாநாடு ஞாயி றன்று தேவனூர்நாடு விளாரம் சமு தாயக்கூடத்தில் நடைபெற்றது. தாலுகா தலைவர் எஸ்.கே.மாணிக்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் எஸ்.கே.ஆண்டி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் வீ.சி.பழனிசாமி வரவேற்றார். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் துவக்கவுரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.டி.கண்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தங்க ராஜ், மாவட்டச் செயலாளர் கே.சின்ன சாமி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலை வர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இம்மாநாட்டில், கொல்லி மலையில் அரசு கலை அறிவியல் கல் லூரி அமைக்க வேண்டும். அரசாணை எண்:1540இன்படி, மலைவாழ் மக்களின் நிலங்களை (ST) பழங்குடியினர் அல்லா தோர் வாங்கினால், செல்லாது என்பதை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக ஸ்ரீரேவதி, செயலாளராக வீ.சி.பழனிசாமி, பொருளாளராக எஸ்.ராஜேந்திரன், துணைத்தலைவர்களாக கே.வி.ராஜ், சி.ராஜம்மாள், துணைச் செயலாளர்களாக எஸ்.கே.மாணிக் கம், சி.தினேஷ்குமார் உட்பட 25 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப் பட்டது. மாநிலப் பொருளாளர் ஏ.பொன் னுசாமி நிறைவுரையாற்றினார். முடிவில், சி.தினேஷ்குமார் நன்றி கூறினார். தருமபுரி இதேபோன்று, மலைவாழ் மக்கள் சங்க தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை கமிட்டி மாநாடு, சித்தேரியில் லட்சு மணன் தலைமையில் நடைபெற்றது. எம்.லட்சுமணன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலா ளர் கே.என்.மல்லையன், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இம்மாநாட்டில், வீடு வழங் கக்கோரி விண்ணப்பித்த சித்தேரி மலை வாழ் மக்களுக்கு வீடு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சித்தேரி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும். சித்தேரியிலிருந்து நல மாங்கடை வரை பேருந்து இயக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் தலைவராக பழனி, செயலா ளராக லட்சுமணன், பொருளாளராக ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.