tamilnadu

img

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 10 - சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்  பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நியாய மான கோரிக்கைகளை அரசு நிறை வேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி யுள்ளார். சென்னை மாநகராட்சி தலைமை  அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொழிலாளர் களை ஞாயிறன்று (ஆக.10) மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண் முகம் கூறியதாவது: மாநகராட்சியில் பல ஆண்டு களாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நியாய மான கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத் தின் கோரிக்கைகளை சிபிஎம்  ஆத ரிக்கிறது. சுமூகமான, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ப தற்காக போராட்ட களத்திற்கு வந்துள்ளோம். அரசுடன் சில கட்ட பேச்சு வார்த்தை நடந்ததாக போராட்டக் குழு தலைவர்கள் தெரிவித்துள்ள னர். அமைச்சரும் எங்களைத் தொடர்பு கொண்டு பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரி வித்துள்ளார். எந்த ஒரு பிரச்சனைக் கும் சமரசத் தீர்வு எட்டப்பட வேண்டும். அந்த வகையில் தொழி லாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும். அதற்கான முயற்சிகளை கட்சி எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, எழும்பூர் பகுதி செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராணி, பகுதிக்குழு உறுப்பினர் ஜா.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.