இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்
தில்லியில் உள்ள சாணக்யபுரியைச் சேர்ந்தவர் பிங்கி. இவர், டிசம்பர் 27, 2024 அன்று ஒரு பயண நிறு வனம் மூலம் தனக்கும், தனது கணவர் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர் களுக்கும் ரூ.48,739க்கு டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார். ஜனவரி 2, 2025 அன்று, பாகுவிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏறியபோது, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அழுக்காகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதைக் கண்டார். இதுகுறித்து அவர், அந்த விமானப் பணிப்பெண்ணிடம் புகார் அளித்த போது, அந்தப் பணியாளர், சுத்தமான இருக்கை களை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறி, மன்னிப்பு கேட்டதோடு, 14ஆவது வரிசையில் மாற்று தனி மைப்படுத்தப்பட்ட இருக்கையை வழங்கினார். இதனால் மன உளைச்சல் அடைந்த பிங்கி, ஜனவரி 13ஆம் தேதி, விமான நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் நிறு வனத்திடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், இழப்பீடு கோரி நுகர்வோர் ஆணையத்தை அணுகினார். அந்த வகையில், விமானத்தில் சுகாதார மற்ற இருக்கை தந்ததற்காக ரூ.1.75 லட்சம் இழப்பீடு வழங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மாவட்ட நுகர் வோர் தகராறு தீர்வு ஆணையம் உத்தர விட்டுள்ளது.