விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை(பிப்.12) நடந்த விபத்தில் சம்பவஇடத்திலேயே 19 பேர் உயிரிழந்த னா். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த வனராஜா (51) ஞாயிறன்று (பிப்.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சிவகாசி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.