tamilnadu

img

புதிர் விளையாட்டு

             புதிர் விளையாட்டு

இப்ப நாம விளையாடுற குட்டிக் குட்டிப் புதிர்களோட பாட்டிதான் விடுகதை. இந்த வாரம் அந்த விடுகதைகளையும் புதுசாப் போட்டு, புது விடைகளைக் கண்டுபிடிச்சு விளையாடுவோம். சரியா? புதிர் விளையாட்டு எப்ப ரொம்ப ருசிகரமா இருக்கும் தெரியுமா? முதல்லயே விடையைப் பார்க்காம விளையாடுறப்பதான். விடுகதை ஆட்டம்  ரெண்டு கை இருக்கும், ஆனா தட்டாது, குலுக்காது, எடுக்காது, அடிக்காது – அது என்ன? நமக்காக எந்த வேலை யும் செய்யும். முந்தி மேசை மேலே உட்காந்துச்சு இப்ப நம்ம மடியிலேயே உட்காருது – அது என்ன? அடி மேல் அடி வாங்கும், அதுக்காக அழாது, ஆனா அது  போடுற சத்தத்திலே நம்மை ஆட வைக்கும். – அது என்ன? வாளி நிறையா தண்ணி. ஆனா வாளியிலே உருவமே இல்லாத ஒண்ணைப் போட்டா அதுக்கு உருவம் கிடைக்கும், ஆனா தண்ணி கோவிச்சுக்கிட்டு வெளியே போயிடும் . அது என்ன?  கன்னங்கரேல்னு இருக்கும், ஆனா அதை நடக்க விட்டா வெள்ளை வெள்ளையா தடம் பதிக்கும் – அது என்ன?

விடைகள் 1) சட்டைக் கை, 2) கணினி, 3) டிரம்,  4) ஓட்டை, 5) சிலேட்டுக்குச்சி