3 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக் ஹோமில் 2025ஆம் ஆண்டுக் கான நோபல் பரிசு அக்., 6 முதல் (திங்களன்று) அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி (நார்வே நாட்டில் அறிவிக்கப்பட்டது) நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொ டர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதி யான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் ஜோ யல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க-இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர்), பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.