வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் போராட்டமா?
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறை யீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்து உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவை வைத்து, தமிழகம் முழுவதும் மதவெறி கலவரத்திற்கு திட்டமிட்ட சங்-பரிவாரங்கள், சென் னையில் ‘வேல் யாத்திரை’ நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலை யில், பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி பதி ஜி.கே. இளந்திரையன், “திருப்ப ரங்குன்றம் பிரச்சனைக்கும், சென் னைக்கும் என்ன தொடர்பு? திருப்ப ரங்குன்றம் மலையைக் காக்க, சென் னையில் பேரணி நடத்த வேண்டிய அவ சியம் என்ன? தேவையில்லாமல் பிரச் சனையை உருவாக்கப் பார்க்கி றீர்கள்” எனக் கடும் கண்டனம் தெரி வித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். “திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான பிரச்சனைக்கு ஏற்கெ னவே தீர்வு காணப்பட்டுள்ள நிலை யில், ஊர்வலம் நடத்தி பொது அமை திக்கு குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது. எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போரா ட்டத்திற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அனுமதி வழங்கக் கூடாது” என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து பாரத் இந்து முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதி பேலா எம். திரி வேதி, பி.பி. வாரலே தலைமையி லான அமர்வு முன்பு, திங்களன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, “சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரி யானது” என்று தெரிவித்தும், “இதில் தலையிட விரும்பவில்லை” என்றும் கூறிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தர விட்டனர்.