ரூ. 21.02 கோடியில் புதிய மகளிர் விடுதிகள் மதுரை, தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டையில் திறப்பு
சென்னை, பிப். 17 - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி, பயிற்சி தேவைகளுக்காக நகரங்களுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாது காப்பான தங்குமிடம் வழங்கும் நோக்கில், மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய நான்கு இடங்களில் ரூ. 21.02 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மகளிர் விடுதிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நான்கு விடுதிகளிலும் 200 மகளிர் தங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் ஏற்கனவே 15 மாவட்டங்களில் 19 தோழி விடுதிகளை நடத்தி வருகிறது. இவற்றில் 1,900 பணிபுரியும் மகளிர் பயன்பெறு கின்றனர். இதோடு, 26 புதிய விடுதிகள் ரூ.239.15 கோடி மதிப்பீட்டில் 2,740 மகளிர் பயன் பெறும் வகையில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பயோமெட்ரிக் நுழைவு, 24 மணி நேர பாதுகாப்பு, வை-பை (Wi-Fi), (CCTV), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுடுநீர், சலவை இயந்திரம், பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு, பொழுதுபோக்கு அறை உட்பட அனைத்து நவீன வசதிகளும் குறைந்த வாடகையில் வழங்கப்படுவது குறிப் பிடத்தக்கது. நிகழ்வில் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமை செயலாளர் நா. முருகானந்தம் உட்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.