மன்னார்குடி, ஜூலை 8 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீட்டை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையில் வரைவுகள் கொடுக்கப் பட்டு இருக்கிறது எனவும் கல்வியானது மாநிலப் பட்டியலில் இருக்கும் வரை தான் அதில் ஜீவன் இருக்கும். எனவே கல்வியானது திரும்பவும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். எனவே புதியவரைவுகல்விக் கொள்கைதிருத்தப்பட வேண்டியது அல்ல திரும்பப் பெறவேண்டியது என கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி கூறினார். திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரைவு தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் முத்துப் பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரை யாற்றிய பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது: முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு 2016 ஏப்ரல் 30ம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சர் ஸ்மிருதிராணியிடம் அறிக்கையை அளித்தது. இதனை தேசியகல்விக் கொள்கை 2016 வரைவுக்கான உள்ளீடுகள் என்ற துணைத் தலைப்புகளில் வெளியிடப் பட்டது. இக்குழுவில் இடம்பெற்றவர்கள் கல்வித்துறையுடன் தொடர்பற்றவர்கள் மட்டுமல்லாது. சிலர் இந்துத்துவ பின்புலம் கொண்டவர். டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை தாய்மொழிக் கல்வி பற்றி குறிப்பிட்டது. ஆனால் கே.கஸ்தூரி ரங்கன் அறிக்கையும் மும் மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க நினைக்கிறது. 484 பக்கங்களைக் கொண்ட இவ்வளவு விரிவான அறிக்கைக்கு 51 பக்கங்களில் தமிழில் சுருக்கமாக மொழி பெயர்த்து ஒரு மாதம் கழித்து வெளியிடப் பட்டுள்ளது. ஆகவே 2019 வரைவு தேசியக்கல்விக் கொள்கையை இந்தியாவின்அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்ட பின்பு வரைவின் மீது கருத்து தெரிவிக்க குறைந்தபட்சம் ஆறுமாத காலம் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கிட வேண்டும். அந்த வகையில் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கக் கூடிய மக்களின் தாய்மொழியில் 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கையை மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியமானது. மேலும் 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கை தயாரித்த கே.கஸ்தூரிரங்கன் குழுவானது தமிழ்நாட்டில் கல்வியாளர்களையோ ஆசிரியர்களையோ சந்தித்து கருத்து கள் கேட்காமலே வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையாகும். வரைவு தேசியகல்விக் கொள்கையில் குழந்தை களுக்கான கல்வி 3 வயது முதல் 18 வயது வரை எட்டு பொதுத் தேர்வுகளை சந்திக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இதுகுழந்தைகளுக்கான மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் கல்வி வளாகத்தைவிட்டு விரட்டி யடிக்கக் கூடிய வகையில் தேர்வுகள் அமையும் என்றும் இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீடு முற்றிலும் நிராகரிக்கும் வகையில் புதியகல்விக் கொள்கையில் வரைவு கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கல்வியானது மாநிலப் பட்டியலில் இருக்கும் வரை தான் அதில் ஜீவன் இருக்கும். எனவே கல்வியானது திரும்பவும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். எனவே புதிய வரைவு கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டியது அல்ல திரும்பப் பெற வேண்டியது என ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் பா.மகாதேவன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் இரா.யேசுதாஸ் தலைமையாசிரியர் பொ.நித்தையன், சமூக ஆர்வலர் எஸ். முஹமதுமாலிக், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.வி.முத்தண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வ சிதம்பரம், ஒன்றிய பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் வரவேற் றார். மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி அறிமுக உரையாற்றினார். முன்னதாக நிறைவாக ஒன்றிய செய லாளர் பா.சோமசுந்தரம் நன்றி கூறினார்.