நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை மே 5 ஆ்ம் தேதி வரை நீட்டிப்பு
நெல்லை, மதுரை,குமரி மாவட்ட பயணிகள் பயனடையும் வகையில் தென்னக ரெயில்வே சார்பில் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை பள்ளி கல்லூரி களுக்கு விட இருப்பதால் இந்த ரெயில் சேவை வருகிற 13ஆம்தேதி முதல் மே 5-ந் தேதி வரை வ நீட்டிக்கப் பட்டுள்ளது. அதன்படி ரெயில் எண் 06012 நாகர்கோவில் -தாம்பரம் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய வழித்தடத்தில் இயங்கும். அதாவது விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயங்கும்.வண்டி எண்:06011 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மரு வத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை வழியாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிறு தோறும் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படுகிறது.இந்த ரெயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், சிவகாசி ,ராஜ பாளையம், சங்கரன் கோவில், தென்காசி கொல்லம் வழியாக இயக்கப் படுவதால் தென்மாவட்ட மற்றும் தென்மாநிலங்களில் உள்ள பயணிகள் பயன் அடைந்து வருகின்றனர். இதனால் இந்த ரெயில் பயணிகளின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த சிறப்பு ரெயில் சேவையை நீட்டிப்பு செய்தால் கோடை விடுமுறையில் பயணிக ளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்ற கோரிக் கையை ஏற்று தென்னக ரெயில்வே சார்பில் இந்த சிறப்பு ரெயில் சேவை நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது.அதன் அடிப் படையில் வருகிற 13ஆம்தேதி முதல் மே 5-ந்தேதி வரை இந்த ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆண்டு விழா
பாபநாசம் வங்காரம்பேட்டை அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், அரசு குரூப்ஸ் நிறுவனங்களின் சேர்மனுமான திருநாவுக்கரசு தலைமை வகித்து, தவளை ஓட்டம், ரொட்டி கவ்வுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார். முன்னாள் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தலைமை ஆசிரியை தீபா ஆண்டறிக்கை வாசித்தார். இதில் ஜெயராஜ், ஓய்வு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பு தங்கராசு, பாபநாசம் பெனிபிட் பண்ட் நிர்வாக இயக்குநர் ஆறுமுகம், ஓய்வு தலைமை ஆசிரியர் ஜோசப், கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி உதவி ஆசிரியர்கள் சங்கீதா, தையல் நாயகி, மற்றும் நந்தினி, பைரோஸ், லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சம்பந்தம், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவி தில்லை நாயகி உட்பட பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தூத்துக்குடியில் பள்ளி அருகே சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி நியூ காலனி, தாமோதர நகர் பகுதியில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் 10 தினங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் வெட்டப்பட்ட சவுக்கு மரக் கழிவுகளை சாலையோரம் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வருபவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிமெண்ட் சிலாப்புகள் திருட்டு: 4 பேர் கைது
அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் சாந்தி, துணை ஆய்வாளர் மகரஜோதி, ஏட்டு யோகராஜ் உள்ளிட்ட காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் சிலாப்புகள் ஏற்றிய ஒரு சரக்கு ஆட்டோ வேகமாக வந்தது. அதை தடுத்து நிறுத்தி், ஆட்டோவில் இருந்த 4 பேரி்டம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அய்யம்பேட்டை அருகே அகரமாங்குடியில் தஞ்சை - விக்கிரவாண்டி நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஒரு மனை பிரிவில் இருந்த 45 காம்பவுண்ட் சிமெண்ட் சிலாப்புகளை திருடி, சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மனைப்பிரிவு உரிமையாளர் பசுபதிகோவிலைச் சேர்ந்த சேவியர் தந்த புகாரின் பேரில், 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.