திருவாரூர், நவ.7- திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலு வலகத்தில் மனு அளித்துள்ள விலை யில்லா வீட்டு மனை பயனாளிகளுக்கு, குடவாசல் பகுதியில் விலையில்லா வீட்டு மனை வழங்கும் திட்டப் பய னாளிகளுக்கு பட்டா வழங்காமல் கிடப்பில் உள்ளது. இதனால் சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, குடவாசல் வட்டாட்சியர் தனசேகரனை நேரில் சந்தித்து 3 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பயனாளிகளின் மனு மீது உரிய நட வடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளார். பயனாளிகள் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு கோரி கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள், முதல்வர் வரை கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் இதையொட்டி கடந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் சட்டசபையில் கவனயீர்ப்பு நேரத்தில் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி சட்டமன்றத்தில் உரையாற்றி அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள் ளார். ஆனால் இதுநாள் வரை எந்தவித மான முன்னேற்றம் இல்லாமல் தேர்வு செய்த பயனாளிகளுக்கு இடம் ஒதுக் கீடு செய்யாமல் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குடவாசல் வட்டாட்சியரை நேரில் சந்தித்து மேற்கொண்ட திட்டத்தில் பய னாளிகளுக்கு இடம் வழங்காமல் கால தாமதமாக செயல்படும் நிலை உள்ளதை எடுத்துரைத்து, நீண்ட கால மாக நிலுவையில் உள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, பயனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் விலையில்லா வீட்டு மனை திட்டத்தில் பட்டா இடம் வழங்கிட வேண்டும். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக, மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனக் கூறி கோரிக்கை மனு அளித்தார். அப்போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, குடவாசல் நகர செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் நகர குழு உறுப்பி னர்கள் விலையில்லா வீட்டு மனை திட்ட பயனாளிகள் உடன் இருந்தனர்.