tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்! கோரிக்கை மாநாட்டில் நாகை மாலி எம்எல்ஏ பேச்சு

அங்கன்வாடி ஊழியர் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்!

கோரிக்கை மாநாட்டில் நாகை மாலி எம்எல்ஏ பேச்சு

“அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழிய ராக்க சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி எம்எல்ஏ கூறினார். தேர்தல் வாக்குறுதி 313 மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அங்கன் வாடி ஊழியர்களைப் பணி வரன் முறை செய்து அரசு ஊழியராக்க வேண்டும்; ஊழியர்களுக்கு 26 ஆயி ரம் ரூபாய், உதவியாளர்களுக்கு 22  ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஓய்வூதிய மாக 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அமைச்சரின் வாக்குறுதிப் படி ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பு, கிராஜூவிட்டி சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் 30 ஆண்டுக்கு மேல்  பணி செய்த ஊழியர் மற்றும் உதவி யாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (மார்ச் 21) சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நடத்திய இந்த மாநாட்டை தொடங்கி வைத்து  பேசிய நாகை மாலி எம்எல்ஏ, “அங்கன் வாடி ஊழியர்களை தவிர்த்துவிட்டு எப்படி ஆட்சிக்கு வரமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது வரு கிற பாசத்தையும், பரிவையும் ஆளும் கட்சியானதும் மறந்து விடுகின்ற னர். தற்போதைக்கு அரசு அங்கன் வாடி ஊழியர்களை கவனிப்பதாக இல்லை. பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லையென்றாலும், மானியக் கோரிக்கையில் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். அங்கன்வாடி ஊழியர் களின் கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்தில் எழுப்புவோம்” என்றார். மாநிலத் தலைவர் எஸ். ரத்தின மாலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், துணைப்பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப் பாளர் தனலட்சுமி, தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க பொதுச்செய லாளர் ஏ. மலர்விழி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் விஜயகுமரன், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். தேவ மணி, செயலாளர் எஸ். ஹேமப் பிரியா உள்ளிட்டோர் பேசினர்.