tamilnadu

img

இசைமுரசு நாகூர் ஹனீபா தமிழ்நாட்டின் சொத்து!

இசைமுரசு நாகூர் ஹனீபா தமிழ்நாட்டின் சொத்து!

முதலமைச்சர் பேச்சு சென்னை, டிச. 25 - இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா  நூற்றாண்டு விழா சென்னை கலை வாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாகூர் ஹனீபா திமுகவிற்கு மட்டும்  சொந்தக்காரர் இல்லை, ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் சொத்து” என்று கூறினார்.  “ஹனீபா என்ற பெயருக்கு ஹனி என்றால் தேன், பா என்றால் பாட்டு  என்று பொருள். தேனாக இனிக்கும் பாட்டை பாடுவதால் அவருக்கு இந்த  பெயர் பொருத்தமானது” என்றார். முறையாக சங்கீதம் கற்றுக்கொள் ளாவிட்டாலும், ஆயிரக்கணக்கான மேடைகளில் கோடிக்கணக்கான மக்களை, தன் குரல் வளத்தால் கவர்ந்தவர் ஹனீபா என்று கூறிய முதலமைச்சர் இறைவனிடம் கை யேந்துங்கள், அவன் இல்லை என்று  சொல்லுவதில்லை என்ற பாடல் தமிழ்நாட்டில் உள்ள எல்லோ ருடைய வீட்டிலும் ஒலிக்கும் பாடல் என்றும் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியில், ஹனீபா பாடல்கள் முழுதொகுதி மற்றும் “இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா நூல் ஆகியவற்றை முதலமைச்சர் வெளியிட்டார். திராவிடர் கழக  தலைவர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். அமைச்சர் பி.கே. சேகர் பாபு, ஐயுஎம்எல் தேசியத் தலை வர் கே.எம். காதர் மொய்தீன், மக்க ளவை உறுப்பினர் எம்.எம். அப் துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், பரந்தாமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.