கட்டுமானத் தொழிலாளர்களின் ரூ.416 கோடி நிதியை சூறையாடிய ம.பி., பாஜக அரசு
1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந் திய நாடாளுமன்றம் கட்டுமானத் தொழிலாளர்களின் நல னுக்காக ஒரு சட்டத்தை இயற்றி யது. இந்த சட்டத்தின்படி, கட்டுமா னத் தொழில் நிறுவனங்கள் கட்டுமா னச் செலவின் 1% வரி செலுத்த வேண்டும். இந்த நிதி தொழிலாளர் களின் ஊதியம், பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் இதர நலன் தொடர்பான நடவடிக்கைகளுக் காக ஒதுக்கப்படும். இந்நிலையில், இந்த கட்டுமா னத் தொழிலாளர்களின் நலனுக் காக ஒதுக்கப்பட்ட ரூ.416 கோடி நிதியை பாஜக ஆளும் மத்தியப்பிர தேச மாநில அரசு சூறையடியுள்ள தாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சிஏஜி அறிக் கையில் கூறப்பட்டுள்ளதா வது: “மார்ச் 31, 2022 நிலவரப்படி, மத்தியப் பிரதேச கட்டுமானத் தொழிலாளர் நலன் வாரியத்தின் (MP BOCW Board) கையிருப்பில் ரூ.1,959.63 கோடி இருந்தது. 2021- 22 நிதியாண்டில் ரூ.634.50 கோடி வரி வருவாய் (நிதி முதலீட்டு வட்டி உட்பட) பெற்றது. ஆனால், அந்த ஆண்டு ரூ.1,128.57 கோடி செல வில், ரூ.416.33 கோடி (36.89%) கட்டு மானத் தொழிலாளர்களின் நல னுக்கான திட்டங்களுக்கு பயன் படுத்தப்படவில்லை. மாறாக மத்தி யப்பிரதேச மாநில அரசு கட்டுமா னத் தொழிலாளர்களின் நல னுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலி ருந்து ரூ.416.33 கோடியை தவறாக மின்சார பில் தள்ளுபடி போன்ற பிர பலமான திட்டத்திற்கு பயன்படுத்தி யுள்ளது” என அதில் கூறப்பட்டுள் ளது. மத்தியப்பிரதேச கட்டுமான தொழிலாளர் நலன் வாரிய செயலா ளர் மேற்பார்வையிலேயே ரூ.416. 33 கோடி நிதி தவறாக சூறையாடப் பட்டுள்ளதாக கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன.