tamilnadu

img

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் மதுரையில் மாலை அணிவித்து மரியாதை

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் மதுரையில் மாலை அணிவித்து மரியாதை

மதுரை, பிப்.7- மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டம் சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள மணி மண்ட பத்தில் உள்ள அவரது திரு வுருவச் சிலைக்கு சனிக் கிழமை (பிப்.7) மாலை அணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது. இந்த நிகழ்வில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் மதுரை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோ.தள பதி, மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் மு.பூமி நாதன், மாநகராட்சி மேயர் (பொ) தி.நாகராஜன் உள் ளிட்டோர் பங்கேற்று மரி யாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, இளமனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவா ணரின் 124-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் கனக லட்சுமி தலைமை வகிக்க,  ஆசிரியை தேவி முன்னிலை  வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். தமிழாசிரியர் நாகேந்திரன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியை ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக உலகத் தமிழ் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பா ளரும், பாவாணரின் கொள்  ளுப் பேரனுமான சீவாப் பாவாணர் கலந்து கொண்டு,  பாவாணரின் தமிழாராய்ச்சி குறித்துப் பேசினார். பாவா ணர் ஐம்பது ஆண்டுகளாக வேர்ச் சொல்லாராய்ச்சித் துறையில் ஈடுபட்டு 52 நூல் கள் எழுதியுள்ளதாகவும், அவற்றில் தமிழ் மொழி மற்  றும் தமிழர் வரலாறு குறித்து  விரிவாக ஆய்வு செய்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.  உலகின் முதல் மனிதன் தமி ழன் என்றும், அவன் தோன்  றிய இடம் குமரிக் கண்டம்  என்றும் பாவாணர் தனது  ஆய்வுகளின் மூலம் நிறுவிய தாகவும் தெரிவித்தார். பாவாணரின் ஆய்வுகள்  இன்றைக்கு போற்றப்பட்டா லும், அவர் வாழ்ந்த காலத் தில் அதற்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என்றும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் மொழியாராய்ச்சியைத் தொடர்ந்து செய்தார் என் றும் சீவாப்பாவாணர் கூறி னார். இன்றைய மாண வர்கள் பாவாணரின் நூல்களை வாசித்து தமிழ் மொழியின் பெருமை மற்றும் சிறப்பை உணர வேண்டும் என்றும், அவரது  ஆய்வுகளைப் பின்பற்றி  இன்று பலர் மொழியா ராய்ச்சியில் ஈடுபட்டு வரு வதாகவும் அவர் தெரிவித் தார். நிகழ்வை உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா ஏற்  பாடு செய்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவி சக்தி பிரியா நன்றி கூறினார்.