மணிப்பூரில் ஊடக சுதந்திரத்தை பறிக்க மோடி அரசு தீவிரம்
வன்முறையால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமான அஜய் பல்லாவின் (மணிப்பூர் ஆளு நர்) கட்டுப்பாட்டில் தற்போது மணிப்பூர் மாநிலம் உள்ளது.
பழங்குடியினர் மீது அடக்குமுறை
இந்நிலையில், மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதான நடவடிக்கை என்ற பெயரில், பழங்குடி மக்க ளுக்கு எதிராக பல்வேறு அடக்கு முறை சம்பவங்கள் தொடர்ச்சி யாக நிகழ்ந்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக மேற்கு இம்பால், கிழக்கு இம்பால் பகுதிகளில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் பழங் குடி இனத்தைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். மணிப்பூ ரில் மெய்டெய் - குக்கி (பழங்குடி) இனக்குழுக்கு இடையேயான மோதலே கடந்த 22 மாதங்களாக வன்முறையாக நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அமல்படுத்தப் பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட வர்கள் அனைவரும் பழங்குடி யினர் பெரும்பான்மையாக வாழும் மலை மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாஜக ஆதரவு பெற்ற மெய்டெய் மக்க ளுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
. ஊடக சுதந்திரம்
அடுத்ததாக ஊடகச் சுதந்தி ரத்தை பறிக்கும் வேலையிலும் அஜய் பல்லா இறங்கியுள்ளார். இம்பால் பிராந்தியத்தில் பாது காப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் என்ன வீடியோ வெளி யிட்டனர்? கைது செய்யப்பட்ட வர்கள் யார்? பத்திரிகையாளரா? என்ற தகவலை அளிக்க மணிப்பூர் காவல்துறையினர் மறுத்து வரு கின்றனர். ஆனால் மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களை ஒடுக்க மற்றும் துரத்த நிகழ்த்தப்படும் அடக்கு முறையை மூடி மறைக்கவே ஊடக சுதந்திரத்தை பறிக்கும் வேலையை மோடி அரசு துவங்கி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.