மார்ச் 18-இல் கோரிக்கை தின பிரச்சார இயக்கம் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு
கூலி உயர்வு, பஞ்சப்படி, சமூக பாது காப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்ச் 18-இல் மாநிலம் முழுவதும் கோரிக்கை தின பிரச்சார இயக்கம் நடத்த தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மே ளன கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டம் மாநிலத் தலைவர் பி.முத்து சாமி தலைமையில் கோவை நீலம்பூரில் சனிக் கிழமை நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம். அசோகன் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். இதில், மோடி அரசின் நாசகர கொள்கை யால் விசைத்தறி தொழில் பெரும் நெருக்கடி யில் உள்ளது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மேலும் நெருக்கடியை தீவிரமாக்கி உள்ளது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் ரூ.26 ஆயிரம், பஞ்சப்படி, சமூக பாதுகாப்பு வேண்டும். இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும். முறை சாரா நல வாரியத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். இதேபோல ஒன்றிய அரசின் ஜவுளிக்கழகம் (சிட்ரா) வழங்கி வந்த இன்சூரன்ஸ் திட்டத்தை நிறுத்தியதை மீண்டும் வழங்க வேண்டும். ஜவுளிச் சந்தைகள் அமைக்க வேண்டும். அனைத்து பகுதி விசைத்தறி தொழிலாளிகளுக்கும் கூலி உயர்வு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மார்ச் 18 ஆம் தேதி மாநில முழுவதும் கோ ரிக்கை தின பிரச்சார இயக்கம் நடத்துவது. இதில், பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களை ஈடுபடுத்துவது என முடி வெடுக்கப்பட்டது.