எலக்ட்ரிகல் மற்றும் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து:3 பேர் காயம் ராணிப்பேட்டை, பிப். 23 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரிகல் மற்றும் ஹார்டுவேர் கடையில் சனிக்கிழமை (பிப். 22) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஹார்டுவேர், எலக்ட்ரிகல் பொருட்கள் எரிந்து தீயில் சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து கலவை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீ கட்டுக்குள் அடங்காததால் தீ மல மல என எரியத் தொடங்கியதில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஆசிட் பெயிண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மூன்று பேருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கலவை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடிய நிலையில் ஆற்காடு தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுமார் அரை மணி நேர த்திற்கும் தீயணைப்பு வாகனம் வராததால் கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்த பொருட்களும் எறிந்ததாக கலவை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடையில் இருந்த பொருட்கள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஹார்டுவேர் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்கள் இருந்து தீயில் கருகியதா கவும் தீயணைப்புத் துறையினர் முதற்கட்ட விசாரணையில் எலக்ட்ரிக்கல் மின் சாதனம் பழுது காரணமாக கடையில் தீப்பற்றி இருக்கலாம் என்று விசாரணை கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்ற வருகிறது. இச்சம்பவம் குறித்து கலவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இந்த தீ விபத்தால் கலவை செய்யார் செல்லும் சாலை யில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.