tamilnadu

img

ஆட்டோ செயலியை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன  (சிஐடியு) மாநில நிர்வாகக் குழு கூட்டம் வேலூரில் மாநிலத் தலைவர் எஸ்.பால சுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்றது.  சிஐடியு மாநில செயலா ளர் எஸ்.கே.மகேந்திரன், ஆட்டோ தொழிலாளர் சம் மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் இ.உமாபதி, சிஐடியு மாநில  துணைத்தலைவர் ஆர்.தெய்வராஜ், ஆட்டோ சங்க நிர்வாகிகள் எம்.சந்திர சேகரன், வி.ஜெயகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கடந்த பிப் 19 அன்று சென்னையில் போக்குவரத்து தொழிலாளர் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தலைமையில் சென்னை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆட்டோ தொழிற்சங்கங் களை அழைத்து ஆட்டோ  மீட்டர் கட்டணம் அமலாக்கம் ஆட்டோ செயலி அமுலாக் கம் குறித்து ஆலோசிக்கப் பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.50 எனவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்ட ருக்கு ரூ.25 என நிர்ணயம் செய்ய வேண்டும்.  மேலும் அரசு சார்பில் கொண்டு வர ப்படவுள்ள ஆட்டோ செய லியை விரைவில் நடை முறைக்கு கொண்டு வர வேண்டும்.  இதனை விரைந்து செயல்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் செயலா ளருக்கு கடிதம் அனுப்பு வது,  காலதாமதம் செய்தால் மார்ச் 2வது வாரத்தில் தமிழ்நாடு தழுவிய அளவில் இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. ஆட்டோக்களை வழிமறித்து அபராதம் விதிக்கும் ஆன்லைன் அபராத தமிழ் நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவல கங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் ஆட்டோ தொழிலாளர்கள் நேரடியாக தங்கள் சேவை கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆட்டோ தொழி லாளர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கு வதோடு, நலவாரியம் சார்பில் வீடுகட்ட ரூ.4 லட்சம் கடனுதவி வழங்க வழி வகை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.