tamilnadu

img

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு விவசாயிகள் சிறப்பு மாநாடு வலியுறுத்தல்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு விவசாயிகள் சிறப்பு மாநாடு வலியுறுத்தல்

பரந்தூர் விமான நிலைய திட்டத் தால் பெருவாரியான விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்பதால், இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடை பெற்ற பரந்தூர் வட்டார விவசாயி கள் நிலவுரிமை பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசுகையில், “2021 சட்டமன்றத் தேர்தலின் போது, விவ சாயிகளின் ஒப்புதலுடன் மட்டுமே நிலங்களை கையகப்படுத்துவோம் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க, விவ சாயிகளின் ஒப்புதல் இன்றி  காவல்துறை, வருவாய்த்துறை யினரை கொண்டு கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்த முயல்கி ன்றனர்” என்றார். விமான நிலைய அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவ சாயிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக விரோத செயல் என்றும் அவர் கண்டித்தார். “போராட்டக் காரர்கள் மீதான அனைத்து வழக்குக ளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

நில கையகப்படுத்தல் குறித்த பிரச்சினைகள்

விமான நிலையத்திற்கு அரசு கூறியுள்ள 5 ஆயிரம் ஏக்கர் நிலம் போதாது என்றும், குறைந்தது 10 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் சண்முகம் சுட்டிக்காட்டினார். “இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர நேரிடும். நல்ல நஞ்சை நிலங்கள், ஏராளமான நீர்நிலைகள் அழிக்கப்படும். இத்த கைய பேரழிவை தடுக்க வேண்டும்” என்றார். “நீதியரசர்கள் பரிந்துரைத்துள் ளபடி, குறைந்த பாதிப்புகளுடன் கூடிய மாற்று இடங்களை தமிழக அரசு ஆராய வேண்டும். மேலும், மச்சேந்திரநாதன் (ஐஏஎஸ்) தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன்? அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை  பொதுமக்கள் அறிய உரிமை உண்டு” என்று கேள்வி எழுப்பி னார்.

போராட்ட அறிவிப்பு

வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் போது, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக சண்மு கம் அறிவித்தார். “விவசாயிகள் நலன் கருதி, எங்கள் கோரிக்கை களை வலுவாக வலியுறுத்துவோம். பொதுமக்களின் ஆதரவுடன் நியாய மான தீர்வு கிடைக்கும் என நம்பு கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்றோர்

மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே.நேரு தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நீரி யல் நிபுணர் எஸ்.ஜனகராஜன், பூவு லகின் நண்பர்கள் அமைப்பின் ஜி.சுந்தர்ராஜன், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் உரையாற் றினர். மாநாட்டில் பரந்தூர் விவசாயி கள் சார்பில் ஜி.சுப்பிரமணி, டி.குண சேகரன், பி.ரவிச்சந்திரன், எஸ்.பி.கதிரேசன், டாக்டர் கே.ரங்கராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் என்.சாரங் கன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தன் வரவேற் புரை நிகழ்த்தினார்.

தரிசு நிலங்களில் தொழிற்பேட்டைகள்


மக்கள் வசிக்கின்ற இடங்களுக்கு அருகிலேயே தொழிற்சாலைகள் அமை த்து வேலைவாய்ப்பை உரு வாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தொழில்துறை  அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம்  நல்லிக்கோட்டை நடை பெற்ற விழாவில் பேசிய அவர், எங்கெல்லாம்  தரிசு நிலம் உள்ளதோ, அங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்  என்றார்.