அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள் 10ஆம் வகுப்பு தகுதி'
நேர்முகத் தேர்வு
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லூரியில் நேர்முகத் தேர்வின் மூலம் கள உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணிகளுக்கு நியமனம் நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 25, 2025 ஆகும். அடுத்த நாளே, அதாவது பிப்ரவரி 26, 2025 அன்றே நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள் 10ஆம் வகுப்பு தகுதி
அஞ்சல்துறை வட்டத்தில் கிராம அஞ்சலக ஊழியர் (Gramin Dak Sevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதில் 21 ஆயிரத்து 413 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 292 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிட நிரப்புதலில் 3 வகையான பணியிடங்களை நிரப்புகிறார்கள். இந்த மூன்று பணியிடங்களுக்கும் குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக அடிப்படைக் கணினிப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். 1. கிளை போஸ்ட் மாஸ்டர் 2. கிளை உதவி போஸ்ட் மாஸ்டர் 3. அஞ்சலக ஊழியர் 3 பணியிடங்களுக்கும் வயது வரம்பானது 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, அதற்குரிய தளர்ச்சி இருக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் சில அடிப்படையான தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அறிவிக்கையில் இந்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். முதல் பிரிவான கிளை போஸ்ட் மாஸ்டராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.12,000 - ரூ.29,300 என்ற அடிப்படையிலும், மற்ற இரு பிரிவினருக்கும் ரூ.10,000 - ரூ. 24,470 என்ற அடிப்படையிலும் ஊதியம் இருக்கும். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அஞ்சல் நிலையம் வாரியான காலிப் பணியிடங்களும் அதில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 3, 2025 ஆகும்.
கடற்படையில் 270 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படையில் குறுகிய காலப் பணி (அதிகாரி)(Short Service Commission Officer)க்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியாகியிருக்கிறது.
மொத்தக் காலிப்பணியிடங்கள் - 270
கல்வித்தகுதி - பி.இ மற்றும் எம்.எஸ்.சி(எந்தெந்தப் படிப்பு, எந்தெந்தப் பணியிடங்களுக்கு தகுதியானது, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் இணையதளத்தில் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், பொது அறிவியல், பகுத்தறியும் திறன், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அழைக்கப்படுவார்கள். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர் களுக்கு 3 ஆண்டுக்காலம் பயிற்சி தரப்படும். இந்தப் பயிற்சியானது அடுத்த ஆண்டு(2026) ஜனவரி மாதத்தில் தொடங்கும். என்.சி.சி. பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், பயிற்சி நிறைவு பெற்ற பிறகு சப்-லெப்டினென்ட் என்ற தரத்திலான பணியும், அதற்கான மாத ஊதியமாக ரூ. 56,100 நிர்ணயிக்கப்படும். கூடுதல் விபரங்களை www.joinindiannavy.gpv.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 25, 2025 ஆகும்.