எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை ஊழியர் சங்க 9வது மாநாடு
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் ஊழியர்கள் சங்கத்தின் 9வது மாநாடு ஞாயிறன்று (பிப். 23) தரமணியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்.விஜயா வரவேற் றார், செயலாளர் அறிக்கையை பொதுச் செய லாளர் ஆர்.ரவியும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எஸ்.வீரமணி யும், 7வது ஊதிய உயர்வுக்கான கோரிக்கை சாசனத்தை செயல் தலைவர் எம்.இன்ப அரசியும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் எஸ்.குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். கவுரவ துணைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். சங்கத்தின் கவுரவ தலைவராக ஆர்.ரமேஷ்சுந்தர், கவுரவ துணைத் தலைவராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயல் தலைவராக ஜெ.இமானுவேல், பொதுச் செய லாளராக எம்.இன்ப அரசி, பொருளாளராக எஸ்.வீரமணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.