ரைவு ரயில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் - பரிக்கல் இடையே டிராக்டர் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. நாகர்கோவிலில் இருந்து வண்டி எண். 16352 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை நெல்லை வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மாலை சுமார் 3.50 மணிக்கு திருவெண்ணெய்நல்லூர் -பரிக்கல் இடையே ஆனைவரி கேட் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக டிராக்டர் ஒன்று மூடப்பட்ட பாதையில் சென்றது. அப்போது ரயில் மோதி, டிராக்டர் மற்றும் அதன் டிரெய்லர் இரு தண்டவாளங்களுக்கு இடையே கவிழ்ந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே ஊழியர்கள், பயணிகள் கீழே இறங்கி வந்து விபத்துக்குள்ளான டிராக்டர் மற்றும் டிரெயிலரை தண்டவாளத்திற்கு வெளியே அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால், சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் செல்லும் வைகை அதிவிரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. விழுப்புரத்தில் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.