யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறுக எஸ்எப்ஐ தென்சென்னை பேரவை வலியுறுத்தல்
க மானியக்குழுவின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் தென்சென்னை மாவட்ட சிறப்பு பேரவை ஞாயிறன்று (பிப்.23) கிண்டி யில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் அமர்நீதி சங்க கொடியை ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் ம.ஸ்வேதா வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அனா மிகா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பேரவையை வழக்கறிஞர் திருமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். எதிர்கால கடமைகள் குறித்து மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பேசினார். பேரவையை நிறைவு செய்து மாநிலத் தலைவர் சம்சீர் அகமது பேசி னார். செயற்குழு உறுப்பினர் கமலேஷ் நன்றி கூறினார். நிர்வாகிகள் 31 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக அமர்நீதி, செயலாளராக எஸ்.ஆனந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.