சாதிவாரி கணக்கெடுப்பு மோடி அரசு ‘தேர்தல்’ அறிவிப்பு
புதுதில்லி, ஏப். 30 - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு டன் சேர்த்து சாதிவாரிக் கணக் கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய பாஜக அரசு திடீரென அறி வித்துள்ளது. எனினும், மக்கள் தொகைக் கணக் கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. 2011-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போ க்குக் கூட்டணி அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பின்போது, 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாதிவாரி விவரங்களும் சேரிக்கப் பட்டன. ஆனால், அவை வெளியிடப்பட வில்லை.
சென்சஸையே நடத்தாத ஒன்றிய பாஜக அரசு
இதன் காரணமாக, 2021-ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப் போடு சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப் பும் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 2014-இல் அதிகாரத்தைக் கைப் பற்றிய நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, 2021-இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே நடத்தவில்லை. கொரோனா சூழலைக் காரணம் காட்டியது. ஆனால், அதன் பிறகு நான்காண்டுகள் கடந்த நிலை யிலும், இப்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை.
'அமைச்சரவைக் கூட்டத்தில் திடீர் முடிவு '
இந்நிலையில் தான், அரசியல் விவ காரங்களுக்கான ஒன்றிய அமைச்சர வைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் புதனன்று நடை பெற்றது. ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட் டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்குப் பின், ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எதிர்வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களையும் சேகரிப்பது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஒன்றிய அரசுக்கே அதிகாரம் உள்ளது
“சில மாநிலங்களில் அரசியல் கார ணங்களுக்காக, ‘சர்வே’ என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்ற னர். இதுபோன்ற கணக்கெடுப்புகள் சமூ கத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். தனித்தனியாக சர்வே நடத்துவதற்குப் பதிலாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக் கெடுப்பு (சென்சஸ்) என்பது ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என் றும் அவர் தெரிவித்தார். எப்போது துவங்கும் என கூறப்படவில்லை எனினும், மக்கள் தொகை கணக் கெடுப்பு எப்போது தொடங்கும் என்று ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. நாடு முழுவதும் மக்கள்தொகை கணக் கெடுப்பு நடத்தி முடிக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும் என்ற நிலையில், கணக்கெடுப்பு எப்போது துவங்கும் என்று கூறப்படவில்லை. எதிர்வரும் மக்கள்தொகை கணக் கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார் என்றாலும், 2026-ஆம் ஆண்டா, 2031- ஆம் ஆண்டா என்பதை தெளிவுபடுத்த வில்லை. கணக்கெடுப்பிற்கு 2025-26 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படாததால், உடனடியாக கணக்கெடுப்பு துவங்க வாய்ப்பே இல்லை.
பீகார் மக்களை ஏமாற்ற மோடி அரசு தந்திரம்'
எனவே, தற்போதைக்கு நடக்க வாய்ப் பில்லாத கணக்கெடுப்பை அவசர அவ சரமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண் டிய காரணம் என்ன; இவ்வளவு காலமும் எதிர்க்கட்சிகள் போராடிய போதும், நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த போதும் வெளியிடாத அறிவிப்பை இப்போது வெளியிட்டது ஏன், என்ற கேள்விகள் எழுகின்றன. பீகார் சட்ட மன்றத் தேர்தலையொட்டி, அம்மாநில மக்களை ஏமாற்றுவதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரி வித்துள்ளன.