100 நாள் வேலை தொழிலாளர்களின் வயிற்றிலடித்தது ‘விபி ஜி ராம் ஜி’ மசோதாவை நிறைவேற்றி மோடி அரசு அராஜகம்!
புதுதில்லி, டிச. 18 - இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரி வித்த போதும், ஏழைகளின் வயிற்றி லடிக்கும் ‘வி பி ஜி ராம் ஜி’ மசோ தாவை அராஜகமான முறையில் மக்களவையில் மோடி அரசு நிறை வேற்றியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) மாற்றியமைப்பதாக கூறி, இந்த திட்டத்தையே ஒழித்துக் கட்டும் வகையில், ‘விபி ஜி ராம் ஜி’ (The Viksit Bharat Guarantee Rozgar and Ajeevika Mission Gramin - VB G RAM G) என்ற திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த சட்ட மசோதாவிற்கு அறிமுக நிலை யிலேயே ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ‘வி பி - ஜி ராம் ஜி’ மசோதாவை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தாக்கல் செய்தது. இதன் மீதான விவா தத்தை, மக்களவையில், ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதன்கிழமையன்று தொடங்கி வைத்தார். இதன் மீது நள்ளிரவு 1.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், ‘‘இந்த மசோதாவின் பெயரை படிப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. இது இந்தி பேசாத மாநிலங்கள் மீது மீண்டும் மீண்டும் இந்தியை திணிப்பதை தவிர வேறில்லை. மாநி லங்கள் மீது இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க ஒன்றிய அரசு புதுப்புது வழிகளை கண்டறிகிறது. இது விக்சித் பாரத் மசோதா அல்ல, விரக்தி பாரத மசோதா’’ என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், கே.ராதாகிருஷ்ணன், அம்ரா ராம், சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். இந்த மசோதாவை நிறை வேற்றக் கூடாது என்றும், நாடாளு மன்ற கூட்டுக் குழு அல்லது தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தி னர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை கள் எதனையும் ஏற்காமல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் நோக்கில், கொண்டுவரப்பட்ட புதிய ‘வி பி - ஜி ராம் ஜி’ சட்ட மசோதாவை, தனது கூட்டணிக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்து, மக்களவையில் வியாழக் கிழமையன்று அராஜகமான முறை யில் மோடி அரசு நிறைவேற்ற முயன்றது. இதனால் ஆவேச மடைந்த ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கை முன்பு கூடி முழக்கங்களை எழுப்பினர். அப் போது, வேகவேகமாக மசோதா நிறைவேறியதாக அறிவித்த சபா நாயகர் ஓம் பிர்லா, அவையையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக கூறி வெளியேறினார். இதனால், ஆவேசமடைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிய ‘வி பி - ஜி ராம் ஜி’ மசோதாவை எதிர்த்து, கிழித்தெறிந்து, தொடர் முழக்கங்களை எழுப்பினர். (கூடுதல் விபரம் : 2)
