tamilnadu

img

மோடி அரசே, வேளாண் விரோதக் கொள்கைகளை திரும்பப் பெறு! மண்டல அளவில் விவசாயிகள் தொடர் முழக்கப் போராட்டம்!

மோடி அரசே, வேளாண் விரோதக் கொள்கைகளை திரும்பப் பெறு! மண்டல அளவில் விவசாயிகள் தொடர் முழக்கப் போராட்டம்!

ஒன்றிய அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, திருப்பூர் என மாநிலத்தின் நான்கு முக்கிய மையங் களில் புதன்கிழமை (பிப். 4) மண்டல அளவி லான தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசானது, தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகை யில், நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா 2025-ஐ முன்மொழிந்துள்ளது. இது சட்டமாகி அமலுக்கு வந்தால், தமிழ கத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து  செய்யப் படும் அபாயம் உள்ளது.  மேலும், 11 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஒரு விளக்கு’ மின் இணைப்பு, வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் சிறு-குறு தொழில் களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரம் ஆகியவையும் ரத்து செய்யப்படும். இதனால் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவர். இந்திய விவசாயிகளிடமிருந்து விதைப் பாதுகாப்பை முழுமையாகப் பறிக்கும் வகையிலும், வெளிநாடுகளிலிருந்து தங்கு தடையின்றி விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையிலும் புதிய விதைச்  சட்டத்தையும் மோடி அரசு கொண்டு வந்துள்ளது.  அதேநேரம் வேளாண் விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டத்தை இயற்ற ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் வகை யில், விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் திட்டத்தை யும், அதற்கு இருந்த மகாத்மா காந்தியின் பெயரையும் மாற்றியுள்ளது. 2006 வன உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற மறுத்து இருக்கிறது. விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக இல்லை.  எனவே, ஒன்றிய அரசின் இத்தகைய வேளாண் விரோதக் கொள்கைகளைக் கண்டி த்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவுத் திட்டங்களை அமல்படுத்தக் கூடாது; தொழில் வளர்ச்சி என்ற பெயரில், விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மண்டல அளவி லான தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. இதில், விழுப்புரத்தில் நடைபெற்ற தர்ணா வில், சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்தி ரன், தஞ்சாவூரில் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், மதுரையில் மாநிலப் பொரு ளாளர் கே.பி. பெருமாள், திருப்பூரில் மாநிலத் துணைத்தலைவர் பி. டில்லி பாபு ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நான்கு மையங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.