ஏழைகளைப் புறக்கணிக்கும் மோடி அரசின் ரயில்வே துறை
மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கடும் விமர்சனம்
இந்திய ரயில்வே, உயர்வர்க்கத் தினர் மற்றும் கார்ப்பரேட்டுகளுக் கானதாக மாற்றப்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், இதில், ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆர். சச்சிதானந்தம் பேசினார்.
“பொதுமக்களின் சொத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மோடி அரசு”
அப்போது, “இந்திய ரயில்வே என்பது ஒன்றிய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். இதன் பிரதான குறிக்கோள் மக்க ளுக்கு சேவை செய்வது என்பதே யாகும். இது பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து நன்கு வளர்த்தெடு க்கப்பட்ட ஒன்றாகும். ஏராளமான நிலம், கட்டடங்கள், பல லட்சம் கிலோ மீட்டர் இருப்புப்பாதைகள் இப்போது இந்திய ரயில்வேயின் சொத்துக்களாகும்” என்று தனது உரையைத் துவங்கிய சச்சி தானந்தம், தற்போதுள்ள மோடி அரசின் ரயில்வே கொள்கையை கடுமையாக சாடினார்.
ஏழைப் பயணிகளைப் புறக்கணிக்கும் ரயில்வே “
இப்போது மோடி அரசாங்கத்தின் அகராதியின்படி, ரயில்வே என்பது ஏழை மக்களுக்கானது அல்ல, மாறாக உயர் வர்க்கத்தினர் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவந்த பாசஞ்சர் ரயில்கள் எல்லாம் இப்போது எக்ஸ்பிரஸ் ரயில் களாக மாற்றப்பட்டுக் கொண்டிரு க்கின்றன. இது ஏழை மக்களைப் பாதிக்கிறது,” என்று குறிப்பிட்டார். “உயர் வர்க்கத்தினருக்கு, ‘வந்தே பாரத்’ மற்றும் ‘தேஜாஸ்’ ரயில்கள் அதீத ரயில் கட்டணங் களுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. மூத்த குடிமக்கள் மற்றும் பத்திரிகை யாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைக் கட்டணங்கள் மோடி அரசின் பட்ஜெட்டில் மறுக்கப்பட்டிருக்கின்றன,” என்று சுட்டிக்காட்டினார். வந்தே பாரத்தில் ஆடம்பரம், ஏழைகளுக்கு அம்ரித் பாரத் “இப்போது நான்கு அம்ரித் பாரத் ஏசி அல்லாத 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் மற்றும் எட்டு பொதுப் பெட்டிகள் இருந்து வருகின்றன. அமரும் வசதியுடன் கூடிய 136 வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தூங்கும் வசதியுடன் கூடிய ரயில்கள் இன்ன மும் இயக்கப்படவில்லை. கலாச்சா ரப் பாரம்பரிய இடங்களுக்காக நான்கு ‘பாரத் கௌரவ் ரயில்கள்’ மோடி அரசாங்கத்தின் மாடல் ரயில்களாக இயக்கப்படுகின்றன,” என்று விளக்கிய சச்சிதானந்தம், “அம்ரித் பாரத் ஏசி அல்லாத பாசஞ்சர் ரயில்கள் ஏழைப் பயணி களுக்காக இயக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இளைஞர்களுக்கு சவால்
தேர்வு எழுத வரும் இளை ஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களை முன்வைத்த சச்சிதானந்தம், “ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு நடத்திய லோகோ பைலட்டுகளுக் கான கணினி அடிப்படையிலான தேர்வு-1இல் தமிழகத்திலிருந்து 6,000க்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் கணினி அடிப்படை யிலான 2-ஆவது தேர்வுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக் கான இந்த கணினி அடிப்படை யிலான 2-ஆவது தேர்வை, தெலுங்கானா மாநிலத்திற்கு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அப்பால் சென்று மார்ச் 19 அன்று எழுத வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். “தேர்வு மையங்கள் பல தமிழகத்திற்கு வெளியே அமைக்கப் பட்டு உள்ளன. தேர்வுகள் எழுத வேண்டிய எண்ணற்ற மாணவர்கள் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு அவரவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திலேயே தேர்வு மையங்களை நிர்ணயிக்க வேண்டும்,” என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்திற்கு பாரபட்சம்
2025-26 ஒன்றிய பட்ஜெட்டில் இதர மாநிலங்களுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள அதே சமயத்தில் தமிழ்நாட்டிற்கு வெறும் 6,625 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப் பட்டிருக்கிறது,” என்று நிதி ஒதுக் கீட்டில் தமிழகத்திற்கு செய்யப்படும் பாரபட்சத்தை சச்சிதானந்தம் சுட்டிக்காட்டினார்.
பராமரிப்புப் பணிகளில் குறைபாடு
கத்தில் 95 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது. நன்று. எனி னும், சுரங்கப்பாதை பராமரிப்பு (tunnel maintenance) மிக மோசமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சுரங்கப்பாதைக ளில் பல தண்ணீரால் சூழப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
சரக்கு போக்குவரத்தில் பின்தங்கிய நிலை
ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து குறித்து பேசிய சச்சி தானந்தம், “ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தைப் பொறு த்தவரை, 1950-க்கும் 2021க்கும் இடையே சரக்குப்போக்கு வரத்து சந்தை இந்தியாவில் 55 மடங்கு அதிகரித்திருப்பதாக ரயில்வே வாரியம் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் இதே கால கட்டத்தில் ரயில்வேயில் சந்தைப் போக்குவரத்து 20 மடங்கு மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். “சரக்கு ரயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 30 கிலோ மீட்டர்களாக இருப்பதை, 50 கிலோ மீட்டர்களாக அதிகரித்திட வேண்டும். கட்டணங்களையும் குறைத்திட வேண்டும். இப்போது 91 விழுக்காடு உயர்த்தப்பட்டி ருக்கிறது,” என்றார்.
தமிழக ரயில் சேவை கோரிக்கைகள்
தனது தொகுதி மற்றும் தமிழகத்திற்கான கோரிக்கைக ளையும் முன்வைத்த சச்சிதானந்தம், “திண்டுக்கல் - காரைக் குடி மற்றும் திண்டுக்கல் - சபரிமலை மார்க்கங்கள் அமை க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருச்சி வழியாக திண்டுக்கல் - சென்னை இடையே தனியே ரயில் கள் விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம் மற்றும் வட மதுரை ரயில் நிலையங்களில் குட்ஸ் ஷெட்டுகள் அமைப்ப தற்கு ஏராளமாக வாய்ப்புகள் உள்ளன,” என்று தெரி வித்தார். “கொடைக்கானல் ரோடு ரயில்வே ஸ்டேஷன் பாரம் பரிய ரயில் நிலையமாகும். கோவிட்-19 காலத்தில் அங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனை மீண்டும் துவக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று அழுத்தம் திருத்தமாக கோரினார். “அம்பாதுரை ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் வண்டிகள் நிறுத்தப்பட வேண்டி யது அவசியம்,” என்று தனது உரையை நிறைவு செய்தார்.