தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தும் மோடி அரசு ஏப்.1 - கருப்பு நாளாக கடைப்பிடிக்க தொழிற்சங்கங்கள் அறைகூவல்
புதுதில்லி, மார்ச் 28- நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களும் ‘ஏப்ரல் 1’ முதல் அமல் படுத்தப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள நிலையில், அன் றைய தினத்தை கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச் சையான துறைவாரி சம்மேளனங்க ளும் சங்கங்களும் இணைந்த கூட்டு மேடை அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு, ஏஐடி யுசி, தொமுச உள்ளிட்ட மத்தியத் தொழிற்சங்கங்களின் பொதுச் செயலா ளர்கள் கையொப்பமிட்டு விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைச் செயல்படுத்துவ தற்கான மத்திய விதிகளை அறிவிக்கும் நாளாக ஒன்றிய அரசால் முன்னரே அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 1-ஐ, நாடு முழு வதும் கருப்பு தினமாக கடைப்பிடிக்கு மாறு, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான துறைவாரி சம்மேளனங்களும் சங்கங்களும் இணைந்த கூட்டுமேடையானது, தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொள் கிறது. இதுவரை தொழிற்சங்கங்களுடன் மோடி அரசு விவாதிக்கவில்லை தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் ‘வணிகம் செய்வதை எளி தாக்குவதற்காக’ கொண்டுவரப்பட்ட, தொழிலாளர்களுக்கு எதிரான- முத லாளிகளுக்குச் சாதகமான இந்தத் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர லாற்றுச் சிறப்புமிக்க ‘பிப்ரவரி 12’ அன்று பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் கூட, தொழிலாளர் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெறவோ அல்லது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தொழிற்சங்கங்களுடன் ஓர் அர்த்தமுள்ள கூட்டத்தை நடத்து வதற்கோ கூட ஒன்றிய அரசு முன்வர வில்லை. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைக்கிறார்கள் மேலும், இந்தத் தொகுப்புச் சட் டங்கள் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஒன்றிய அரசாங்கம் தொழிற்சங்கங் களுடன் எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை. ஒரு தேசமாக இந்தியா கையெழுத்திட்டு உறுதிபூண்டுள்ள சர்வதேச தொழிலாளர் தர நிர்ணயங் களை மீறி, இந்த நாட்டின் தொழி லாளர்களின் உயிர்களைப் பணயம் வைக்கும் இத்தகைய ஒரு தீவிரமான விஷயம் குறித்து விவாதிக்க எந்த இந்தியத் தொழிலாளர் மாநாடும் (Indian Labour Conference) கூட்டப் படவில்லை. 1926-இல் உறுதிசெய்யப்பட்ட தொழிற்சங்க உரிமைகள் இந்தத் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், நமது நாட்டின் செல் வத்தை உருவாக்கும் தொழிலாளர் களை, மீண்டும் பிரிட்டிஷ் காலனித் துவ காலத்தின் சுரண்டல் நிலைமை களுக்குத் தள்ளுவதற்கானதாகவே உள்ளன. காலனி ஆதிக்க காலத்தி லும், பின்னர் சுதந்திர இந்தியாவிலும், கடுமையான சுரண்டலுக்கு எதிராகப் பணியிடப் பாதுகாப்பு, சங்கம் அமைப் பதற்கான உரிமை, கூட்டுப் பேர உரிமை, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உட்படப் போராட்டம் நடத்தும் உரிமை ஆகியவற்றுக்காகத் தொழிலா ளர் வர்க்கம் போராடியது. அது கண்ணி யமான ஊதியம் மற்றும் சமூகப் பாது காப்புக்காகவும், நிரந்தரப் பணி களில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்து வதற்காகவும், சம வேலைக்குச் சம ஊதியம், ஊக்கத்தொகை, பணிக் கொடை மற்றும் ஓய்வூதிய உரிமை கள் போன்றவற்றுக்காகவும் போராடி யது. 1926-ஆம் ஆண்டின் தொழிற்சங்கச் சட்டத்தின் மூலம் நமது தொழிற்சங்க உரிமைகளைச் சட்டப்பூர்வமாக்க முடிந்தது. போராடி நிலைநாட்டப்பட்ட 150 தொழிலாளர் சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தில் நமது முன் னோர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தின் மூலம் ஐந்து சட்டங் களை வென்றெடுத்தோம். மீத முள்ள அனைத்து மத்திய சட்டங்களும் (மொத்தம் 44 மத்திய சட்டங்கள்) சுதந்திர இந்தியாவின் நாடாளு மன்றத்தின் மூலம் நிறைவேற்றப் பட்டன. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் நலன் பொதுப் பட்டியலில் இடம்பெற்றி ருந்ததால், சுமார் 150 சட்டங்கள் மாநில சட்டமன்றங்கள் மூலம் நிறைவேற்றப் பட்டன. இவை அனைத்தும் சுதந்தி ரத்திற்கு முன்னும் பின்னும் தொழிலா ளர் சார்பு அரசியல் சக்திகளின் ஆத ரவுடன் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் மூலம் அடையப் பட்டன. இவை ஏறக்குறைய 150 ஆண்டு காலப் போராட்டத்தின் சாதனை களாகும். வேலை செய்யும் உரிமையையே பாஜக அரசு பறித்துள்ளது! ஒன்றிய அரசில் உள்ள தற்போ தைய ஆளும் ஆட்சியானது, இந்தத் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மூலம் இவை அனைத்தையும் சீர் குலைக்கப் போகிறது. இந்தச் தொகுப்புச் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. தொழிற்சங்கங்கள் அமைப்பதை மேலும் கடுமையாக்குதல், பதிவைக் கடினமாக்குதல், மறுபுறத்தில் தொழிற்சங்கங்களின் பதிவை நீக்கு வதையும் அங்கீகாரத்தை ரத்து செய்வ தையும் எளிதாக்குதல், முதலாளிகளின் மீறல்களைக் குற்றமற்றது என்றாக்கு தல், தொழிற்சங்கங்கள் மற்றும் தலை வர்களுக்கு அதிக தண்டனைகள் வழங்குவதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் குற்றமாக்குதல், வேலைநேர வரம்பை முடிவில்லாமல் வைத்து, முதலாளிகளும் அரசாங்க மும் அதை எந்த அளவிற்கு வேண்டு மானாலும் நீட்டிக்க வழிவகுத்தல், வேலைநிறுத்தம் செய்யும் உரிமை யை நடைமுறையில் சாத்தியமற்ற தாக்குதல், நிலையான கால வேலை வாய்ப்பை இயல்பானதாக மாற்றுதல், தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு நட வடிக்கைகளை அகற்றுதல், அனை வருக்கும் பாதுகாப்பு என்ற பொய்யான கூற்றுக்கு மாறாக சமூகப் பாதுகாப்பி லிருந்து அதிக விலக்கல்கள், பாது காப்பு விதிமுறைகளைப் பெருமளவில் மீறுதல் மற்றும் 17 துறை சார்ந்த தொழி லாளர் சட்டங்களில் உள்ள குறைந்தபட்ச துறை சார்ந்த பாதுகாப்பு கடமைகளை அகற்றுவதன் மூலம் அதிக எண்ணிக்கை யிலான தொழிலாளர்களைத் தொழில் பாது காப்பு மற்றும் ஆரோக்கியத்திலிருந்து விலக்குவதாக இந்தத் தொகுப்புச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளுக்கே எதிரான சட்டப் பிரிவுகள் வாழ்க்கை ஊதியம் எதுவும் இல்லை, மாறாக சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத் தைக் கைவிடுவதற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள தேசிய அளவி லான குறைந்தபட்ச ஊதியம் என்ற ஒரே ஒரு அடிமட்ட ஊதியத்தைக் கொண்டு வந்து சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்தத் தொகுப்புச் சட்டங்களில், முறைசாராத் தொழிலாளர்கள், உரிமைகள் அற்றவர் களாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுப்புச் சட்டங்கள், இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், சர்வதேச தொழிலாளர் தரநிர்ணயத்திற்கும் மற்றும் மனித உரிமைகளுக்கும் எதிரான பிரிவுகளைக் கொண்டுள்ளன. நீண்டகாலப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராவோம் மத்தியத் தொழிற்சங்கங்களான நாங்கள் இந்தத் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. 2026 பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையும் அணிதிரட்டலையும் மாபெரும் வெற்றிபெறச் செய்த தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற குடி மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்தும் அதே வேளையில், நீண்டகாலப் போராட்டங்களுக்குத் தயாராக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பின்னணியில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் ஏப்ரல் 1 அன்று கருப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மாநிலப் பிரிவுகளின் கூட்டு மற்றும் தனிப்பட்ட முடிவுகளின்படியும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஆதரவுட னும் இது பல்வேறு வடிவங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டும். பணியிடங்களில் கருப்புப் பட்டைகள் அணிவோம்! பணியிடங்களில் கருப்புப் பட்டைகள், கைகள்/நெற்றியில் பட்டைகள் அணிதல், முழக்கங்களுடன் மதிய உணவுநேரப் போராட்டம், சாத்தியமான இடங்களில் எதிர்ப்பு தர்ணாக்கள் மற்றும் பேரணிகள், மிதிவண்டி/மோட்டார் சைக்கிள் பேரணி கள் அல்லது வேறு ஏதேனும் புதுமையான முறைகள் மூலம் இவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடுமையான போராட்டங்களின் மூலம் வென்றெடுக்கப்பட்ட தொழிற்சங்க உரிமை யையும், கூட்டுப்பேர உரிமையையும், பேச்சுரிமையையும் தக்கவைத்துக் கொள்வ தற்கும், நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் உரிமையை உறுதிசெய்வ தற்கும், இந்த எதிர்ப்புப் போராட்டத் திட்டத் திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை நல்குமாறு மத்திய தொழிற் சங்கங்களான நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.