tamilnadu

img

மமக, எஸ்டிபிஐ வேட்பாளர்கள் சிபிஎம் மாநிலச் செயலாளருடன் சந்திப்பு

மமக, எஸ்டிபிஐ வேட்பாளர்கள் சிபிஎம் மாநிலச் செயலாளருடன் சந்திப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் வேட்பாளருமான ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் மாநிலத் தலைவருமான நெல்லை முபாரக் ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தச் சந்திப்பில் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்களான க. கனகராஜ், என்.பாண்டி, எஸ்.கண்ணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரும் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.