tamilnadu

img

கூட்டுறவுத்துறை அமைச்சர் மதுரை செல்லூர் கே.ராஜூ தப்பினார்

மதுரை, மார்ச் 8- மதுரையில் திறக்கப்படாத ரவுண்டானா வில் கபடி விளையாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் கற்சிலை அமைப் பது குறித்து அதிகாரிகள், கட்சித் தொண்டர் களுடன் ஆய்வு செய்யச் சென்ற அவர் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து பூமிக்குள் விழுந்தது. நல்வாய்ப்பாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காயமின்றி தப்பினார். மதுரை செல்லூரில் (பாலம் இறங்கும் இடத்தில்) மதுரையின் பெருமையை வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, உள்ளுர் மக்களும்அறிந்துகொள்ளும் வகை யில் பளிங்கு  போன்ற தோற்றமுடைய கற்க ளால் (டைல்ஸ்) ரவுண்டானா அமைக்கப்பட் டுள்ளது. பணிகள் முடிந்து பல மாதங்களாகி யும் திறக்கப்படவில்லை. இந்த ரவுண்டா னாவில் கபடி விளையாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் வீரர்களின் கற்சிலை யை வைக்கலாமே என்ற யோசனை அமைச்ச ருக்கு தோன்றியிருக்கிறது. இதையடுத்து கட்சித் தொண்டர்கள், அரசு அதிகாரிகள், கபடி வீரர்களுடன் ரவுண்டானாவிற்குச் சென்று கற்சிலை அமைப்பது குறித்து பேசிக்கொண் டிருந்தார். அப்போது பூமி குலுங்கியது போன்ற அறிகுறி தென்பட்டது. கண்ணி மைக்கும் நேரத்தில் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த சில டைல்ஸ் கற்கள் பெயர்ந்து பெரும் பள்ளம் ஏற்பட்டது. அமைச்சரைச் சுற்றியிருந்த சிலர் அந்த பள்ளத்திற்குள் விழுந்தனர். பின்னர் சுதா ரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கைதூக்கி விட்டு மேலே வந்தனர். நல்வாய்ப்பாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காயமின்றி தப்பினார்.