பழைய சோறு நீரிழிவு நோயை தடுக்கும் அமைச்சர் தகவல்
சென்னை, ஜன. 5- பழைய சோறு சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் நடைபெற்ற பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கில் பேசிய அவர், பழைய சோற்றில் நார்ச்சத்து 631 சதவீதம், எதிர்ப்பு மாவுச்சத்து 270 சதவீதம், புரதச்சத்து 24 சத வீதம் அதிகமாக உள்ளதாகவும், இரும்புச்சத்தை 12 மடங்கு அதிகமாக உடல் எடுத்துக் கொள்ள உதவுவதாகவும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி மூலம் கண்ட றியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றை தடுக்கவும், கர்ப்பிணிகளுக்கும் பழைய சோறு நன்மை அளிப்பதாக அமைச்சர் விளக்கினார். தனக்கு சிறுவயதிலிருந்தே வாரத்திற்கு இரண்டு முறை பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இருப்பதாகவும், இனி ஏழு நாட்களும் சாப்பிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
