tamilnadu

img

மினி உலகக்கோப்பை கிரிக்கெட் - 2025

இறுதிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?

ரிக்கெட் உலகில் மினி உலகக் கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதன் கிழமை அன்று நடைபெறும் இரண்டா வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின் றன. கடந்த சீசனில் (2017) இரு அணி களும் குரூப் சுற்றோடு மினி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி யது. அதனால் நடப்பு சீசனில் இறுதிக்கு முன்னேறி, இரண்டாவது முறையாக மினி உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணி கள் தீவிர பயிற்சியுடன் களமிறங்கு கின்றன. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் உலகின் முதல் மினி உலகக்கோப்பை யை (1998) வென்ற அணியாகும். அதே போல நியூஸிலாந்து அணி இரண்டா வது மினி உலகக்கோப்பையை 2000ஆம் ஆண்டு வென்றது. அதன்பிறகு 25 ஆண்டுகளுக்கு மேலாக இரு அணிகளும் மினி உலகக்கோப்பை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெட் அவுட் அதிர்ந்த துபாய் மைதானம்

னி உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் (இந்தியா - ஆஸ்திரேலியா) துபாயில் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.  இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மீது இந்திய வீரர்கள்,  ரசிகர்களின் கண் இருந்தது. காரணம் 2023ஆம் ஆண்டு இந்திய அணி உல கக்கோப்பையை தவறவிட்டது டிராவிஸ் ஹெட்டால் தான். உலகக்கோப்பை மட்டுமின்றி கடந்த ஓராண்டு காலம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றி நடைக்கு பங்கம் வைத்து வருகிறார். பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடரில் கூட ஹெட் இந்திய அணியின் முன்னேற்றத்தை தடுத்தார். இதனால் தற்போது நடைபெற்று வரும் மினி உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டத்திலும் இந்தியாவை இறுதிக்கு முன்னேறாமல் தடுத்து விடுவாரா? என்ற அச்சம் இந்திய ரசிகர்களிடையே இருந்தது. இதனால் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட் மிக முக்கியமானதாக இருந்தது.  இந்நிலையில், மினி உல கக்கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட், தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் 33 பந்துகளில் 39 ரன்கள் குவித்து விரைவிலேயே ஆட்ட மிழந்தார். டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த மைதானத்தில் குவிந்து இருந்த இந்திய ரசிகர்கள் ஆக்ரோஷமாக கத்தினர். இதனால் துபாய் மைதானம் அதிர்ந்தது.

இந்தியாவில்  மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது

ஆசிய யோகாசன சாம்பி யன்ஷிப்பின் இரண்டா வது சீசன் மார்ச் 29 முதல் 31 வரை தில்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகி றது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. ஒன் றிய விளையாட்டு அமைச்சகம் மற்றும் யோகாசன பாரத் இணை ந்து நடத்தும் இந்த ஆசிய யோகா சன சாம்பியன்ஷிப்   தொடர் மூலம் ஒலிம்பிக்கில் யோகா சனத்தைச் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் ஏற்படலாம் என போட்டி அமைப்புக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.