tamilnadu

img

மின் ஊழியர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

மின் ஊழியர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 4) பல்லாவரம் துணை மின் நிலைய வளாகத்தில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வை மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் இந்து மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தின. மின்நிலைய உதவி செயற்பொறியாளர் ஆர்.பாரதிதாசன், மத்திய அமைப்பின் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கிளை-2ன் தலைவர் பி.டில்லிகுமார், செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை, பொருளாளர் பிரபுதேவா உள்ளிட்டோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.