வாணிப கழக குடோனில் தரமற்ற அரிசி
சட்டமன்றக் குழு அதிர்ச்சி
கடலூர் நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த சட்டமன்ற பேரவை யின் பொது நிறுவனங்கள் குழுவினர் தரமற்றதாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறு வனங்கள் குழுவின் தலைவர் ஏ.பி. நந்தகுமார் தலைமை யில் குழுவின் உறுப்பினர் கள் மு.பெ.கிரி, ம.சிந்தனை செல்வன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனி வாசன் ஆகியோர் செவ் வாய்க்கிழமை (மார்ச் 4 ) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா. ராஜேந்திரன், கோ.ஐயப் பன், வருவாய் அலுவலர் ராஜசேகர், கோட்டாட்சியர் அபிநயா, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரி கள் உடனிருந்தனர். நெய்வேலி சுரங்கம் 1,வியூ பாயிண்டை பார்வை யிட்டனர். பின்னர் கறி வெட்டுப் பகுதி, காடு வளர்ப்பு பகுதிகள் மற்றும் மறு சீரமைப்புக்கு பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களையும் பார்வை யிட்டனர். பின்னர் கடலூர் சிப்காட்டில் உள்ள கெம்பி ளாஸ்ட் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நுகர்வு பொருள் வாணிப கழக குடோனுக்கு சென்றனர். அங்கு அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் உள்ள அரிசியை ஆய்வு செய்தனர். அப்போது, தனி யார் அரவை ஆலையிலி ருந்து வந்த அரிசி பழுப்பு நிறத்தில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழுவின் தலைவர், இந்த அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், எந்த எந்த அரிசி ஆலைகளில் இருந்து அரிசி வந்தது என்ற பட்டியலை கேட்டறிந்தார். தமிழகத்தில் வேறு எங்கும் பழுப்பு நிற அரிசி இல்லாத நிலையில் கடலூர் குடோனுக்கு மட்டும் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்.