tamilnadu

img

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும்  அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பரசி தலைமை தாங்கினார். செயலாளர் கலைச்செல்வி, பொருளாளர் வசந்தா, நிர்வாகிகள் ஜெயா, சரஸ்வதி, ஆரோக்கிய மேரி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட துணை தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் உரையாற்றினர். இதேபோல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயில் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமையில் ஏராளமானோர்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.