ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப்பணி இறுதி கட்டத்தை எட்டியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப்பணி இறுதி கட்டத்தை எட்டியது பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள் ளது. ஏப்ரல் மாதத்திற்குள் மக்கள் பயனபாட்டிற்கு கொண்டுவரும் வகையில் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம், பல்லாவரத்தை கடந்து சென்னைக்குள் நுழைகின்றன. ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க மீனம்பாக்கம், நாகல்கேணி சந்திப்பு, குரோம்பேட்டை என அடுத்தடுத்து மேம்பா லங்கள் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகும் போக்கு வரத்து நெரிசல் குறைய வில்லை. குறிப்பாக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை - குன்றத்தூர் சாலை, ஜிஎஸ்டி சாலை - பல்லாவரம் சந்தை சாலை ஆகிய இடங்களில் போக்கு வரத்து நெரிசல் கடுமையா னது. எனவே, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் 1.5 கிமீ நீளத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2016ல் கட்டுமானப்பணி தொடங்கி, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இருவழிப்பதை பால மாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தாம்பரம்-சென்னை மார்க்கமாக மட்டும் வாகனங்கள் செல்லும் வகையில் திறக் கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். “விமான நிலையத்தி லிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் சாலை பாலம் அருகே வரும்போது குறுக லாக உள்ளது. அதன்காரண மாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பாலத்தை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும், பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஜிஎஸ்டி சாலை - குன்றத்தூர் சாலை சந்திப்பில் உள்ள தடுப்பு களை அகற்றி வாகன போக்குவரத்திற்கு அனு மதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. இதனை வலியுறுத்தி 2022ஆம் ஆண்டு மார்ச் 26ந் தேதி சிபிஎம் தலைமையில் பல்லாவரம் வாரச்சந்தை வியாபாரிகள், பல்லாவரம் ரயில்வே ஸ்டேசன் ரோடு சிறு கடை வியாபாரிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அதனை தொடர்ந்து அமைச்சர் தா.மோ. அன்பர சனிடம் சிபிஎம் தலைவர்கள் மனு அளித்தனர். இதனையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பர சன் மற்றும் நெடுஞ்சாலை த்துறை அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டு மே 16ந் தேதி மேம்பாலத்தை ஆய்வு செய்தனர். 3 மாதத்திற்குள் பாலத்தின் இரு முனைகளில் உள்ள மையத்தடுப்புகளை அகற்றி, இரு வழிப்பாதை யாக மாற்றவும், மேலும், ராஜீவ் காந்தி சாலைக்கு செல்ல தடையாக உள்ள தடுப்புகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை- தாம்பரம் மார்க்கத்தில் பல்லாவரம் மேம்பாலம் தொடங்கும் இடத்தின் பக்க வாட்டில் ராணுவத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை பெற்று சாலை விரிவாக்கம் செய்யப் படும் என்றார். மறியல் அமைச்சர் அறிவுறுத்தி 6 மாதங்களை கடந்தும் பாலத்தை இருவழிப்பாதை யாக மாற்ற அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவில்லை. பாலத்திற்கு கீழே ஜிஎஸ்டி சாலையில் இருந்து குன்றத் தூருக்கு திரும்பி செல்லும் சந்திப்பில் சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத்துறை பணம் கொடுத்தும் போக்கு வரத்து காவல்துறை சிக்னல் அமைக்கவில்லை. இதனை கண்டித்து 2022ஆம் ஆண்டு நவ.3ந் தேதி ஜிஎஸ்டி சாலை யில் சிபிஎம்
மறியல்
நடத்தி யது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்து வழக்கு பதிவு செய்தது. அதன்பிறகு, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜிஎஸ்டி சாலை - குன்றத் தூர் (இந்திராகாந்தி) சாலை சந்திப்பில் இருந்த தடுப்பு களை அகற்றி பாதசாரிகள் கடக்கவும், சிக்னல் அமைத்து வாகனங்கள் செல்லவும் காவல்துறை யினர் அனுமதித்தனர்.
இருவழிப்பாதை
கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேம்பாலம் இரு வழிப்பாதையாக மாற்றப் பட்டது. அதன்பிறகும் சென்னை-தாம்பரம் மார்க்கத்தில் வாகன நெரி சல் குறையவில்லை. வாகனப் பெருக்கம், சாலை விரிவாக்கப் பணிகள் முடி வடையாததால் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதி கரித்தது. இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு ராணு வம் நிலம் ஒப்படைத்தது. அதன்பிறகு ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலையை மூன்று வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வரு கிறது. சாலை விரிவாக்கப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் பயன் பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.