ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடித்திடுக கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் திட்டமிட்ட காலத்திற்குள் விரைவாக கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரி வித்தார். கள்ளக்குறிச்சி ஒன்றியம், வீரசோழபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் 4.3. 2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், மாவட்ட நிர்வாகப் பயன்பாட் டிற்காக அனைத்து நிர்வாக வசதிகளுடன் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மாக கட்டப்பட்டு வருகிறது என்றார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் பிரச்சாரம்
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பொதுத் தேர்வு மைய வளாகம் முன்பு தனியார் கல்வி நிறுவ னத்தினர் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளை வழி மறித்து நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால், மாணவர்களின் பலர் சங்கோசப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஏற்கனவே, தேர்வு குறித்து ஒருவித சிறு பயத்துடன் வரும் மாணவர்களிடம் துண்டு பிரசுரங்களையும் அதில் தங்களது கல்வி நிறுவனத்தின் அருமை பெருமைகளைக் கொண்ட பொய்யான தகவல்களையும் வழங்கி வருகின்றனர்.