மும்பை, குஜராத் தொழிற்சாலைகள் மூடல் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்
வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு (LPG) இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஜவுளி, பளிங்கு மற்றும் ரசாயனத் தொழிற்சாலை கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொரோனா காலத்தைப் போன்ற ஒரு சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. வேலையிழந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்குத் தங்கள் குடும்பங்களுடன் ரயில்கள் மூலம் திரும்பி வருகின்றனர். ஜெய்ப்பூர், அகமதாபாத் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. மும்பை மோசம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிலிண்டர் விலை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்க ளில் மோதல் சம்பவங்கள் அரங்கேறி யுள்ளன.
