தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்ஸி
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமையன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். காலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில், ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் வடிவமைக்கப்பட்ட தனது 70 அடி உயர சிலையை காணொலி மூலம் மெஸ்ஸி திறந்து வைத்து வைத்தார்.
