தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார். திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், 66 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். இதில் மெலட்டூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
