மேகதாது அணை தமிழ்நாடு அரசின் மனு செப்டம்பர் இறுதியில் விசாரணை
கர்நாடக மாநிலம் பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்க ளில் நிலவும் தண்ணீர் பிரச்சனை யை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யவும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் என்று கூறி ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணிகளில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக கர்நாடக அரசு ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் அணை கட்ட ஒப்புதலுக்காக ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது. ஆனால் இந்த அணை கட்டப்படக் கூடாது என்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகியமாநி லங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. மேலும் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. கர்நாடக அரசின் முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் இறுதியில் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.