மீரட் சதி வழக்கு
கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் அதன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு களில் மிகவும் புகழ்பெற்ற வழக்கு மீரட் சதி வழக்கு ஆகும். பெஷாவர், கான்பூர் சதி வழக்குகளுக்கு பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சியை ஆளும் வர்க்கத்தினரால் தடுக்க இயலவில்லை. ஒருபுறம் சோஷலிச சோவியத்து நாடு வறுமை, வேலையின்மையை முற்றிலும் அழித்து புதுமை படைத்து முன்னேறி யது. மறுபுறமோ ஏகாதிபத்திய உலகம் வேலை யின்மை, வறுமை, ஏற்றத்தாழ்வு பொருளாதார பெருமந்தம் என நெருக்கடியின் விளிம்புக்கே சென்றது. ஏழை எளிய உழைக்கும் மக்கள் மீதும்
இந்தியா போன்ற காலனி நாட்டு மக்கள் மீதும் கடு மையான தாக்குதலை பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யம் தொடுத்தது. இதனால் மக்கள் போராட்டங் கள், தொழிலாளர் விவசாயிகள் கிளர்ச்சிகள் பல மடங்கு அதிகரித்தன. பம்பாயில் லட்சக்கணக் கான நெசவுத் தொழிலாளர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம் ஆறு மாதம் நீடித்தது. மக்க ளின் போராட்டங்களை எல்லாம் தலைமை தாங்கி வழி நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்ததால் தேசிய இயக்கங்க ளுக்குள் இருந்த இடதுசாரி தேசபக்த புரட்சி யாளர்களுடன் தொடர்பு அதிகரித்து வந்தது. இது ஏகாதிபத்தியத்திற்கு பெரிதும் நெருக்கடி யை கொடுத்தது. எப்படியாவது கம்யூ னிஸ்ட்களை முடக்கி விடவும்
தேசிய இயக்கத்து டன் ஆன அவர்களது உறவை தனிமைப்படுத்திட வும் பிரிட்டன் ஏகாதிபத்தியம் சதி திட்டம் தீட்டி யது. இதன் விளைவு மீரட் சதி வழக்கு. இந்தியா வில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் எண் ணத்துடன் இந்தியா வந்து செயல்பட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் பிலிப் ஸ்பிராட்/ பென் பிராட்லி போன்ற பிரிட்டன் கம்யூனிஸ்டுகளை இந்தியா வை விட்டு அனுப்பும் நோக்கத்துடன் பொதுமக் கள் பாதுகாப்பு மசோதா என்ற மசோதாவை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. அதற்கு பெயர் தான் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதாவே தவிர உண்மையில் அது ஏகாதித்திய நலன்கள் பாதுகாப்பு மசோதா. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விரோதமாக செயல்பட்ட பிரிட்டிஷ் குடிமக்களை பிரிட்டனுக்கே நாடு கடத்தல்தான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.