தகுதியுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க மாதர் சங்கம் கோரிக்கை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சசிகலா தலைமையில் கரூரில் நடைபெற்றது. மாதர் சங்க மாநிலச் செயலாளர் லெட்சுமி மாநிலக் குழு முடிவு களை விளக்கி பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பட்டா கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை யாருக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. சமீபத்தில் தமிழக அரசு பட்டா யாருக்கெல்லாம் வழங்குவது என்பது சம்பந்தமான நெறிமுறை குறிப்பை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பல ஆண்டு களாக புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து, தற்போது பட்டா கேட்டு மனு செய்த தகுதி யான நபர்களுக்கும், வீட்டுமனை இல்லாமல் பட்டா கேட்டு மனு கொடுத்தவர்களுக்கும் பட்டா வழங்க கரூர் மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் சுக்காலி யூர், கடவூர் ஆகிய இடங்களில் நடந்த குழந் தைகள், மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக மாதர் சங்கம் தலையீட்டின் பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கயவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு முன்வருவ தோடு, துரிதமாக வழக்கினை நடத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புகளூர் நகராட்சி கவுன்சிலர் இந்துமதி, மாவட்ட துணைத் தலைவர் ரஜினி உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.