மதுரை, நவ.7 - நவம்பர் புரட்சி தின கொடி யேற்று விழா வியாழனன்று மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னதாக தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றியதாவது- நவம்பர் புரட்சி தினத்தை உல கம் முழுவதும் உள்ள நாடுகள் கொண்டாடுகின்றன. மற்ற விழாக்களை விட, நவம்பர் புரட்சி தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத் யூனியனில் சுரண்ட லற்ற ஆட்சி அமைத்த முக்கிய வர லாற்று நிகழ்வுதான் இந்த நவம்பர் புரட்சி.
முதலாளித்துவ சக்திகளின் கூப்பாடு
அடித்தட்டு, சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய நாள்தான் இந்த நவம்பர் புரட்சி. எதையும் சாதித்துக் காட்டுகிற நாள்தான் இந்த புரட்சிதினம். சோச லிசத்திற்கும் மார்க்சியத்திற்கும் முடிவு ஏற்பட்டதாக உலகம் முழு வதும் கூச்சலிட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அது, சோவி யத்திற்கு ஏற்பட்ட பின்னடைவே தவிர, மார்க்சியத்துக்கும், சோசலிசத்திற்கும் ஏற்பட்ட பின்னடைவு அல்ல. இனப்படுகொலையை பகி ரங்கமாக அரங்கேற்றி பல்லா யிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசு இன்றைக்கு கூச்சலிடு வதற்கு காரணம், சோசலிசம் அங்கே இல்லை என்பதுதான். இதனால்தான் இராக்கை, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தவிடுபொடி யாக்கியது, ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கியது. சோவியத் ஒன்றியம் இல்லாததால், இன்றைக்கு உலகமே இந்நிலை யை அனுபவிக்கிறது. சோவியத் நீடித்திருந்தால், மற்ற நாடுகள் மட்டுமல்ல, இந்தி யாவிலும் இந்நிலை இருந்திருக் காது. தந்தை பெரியார், நெ.து.சுந்தரவடிவேலு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோவி யத்தைக் கண்டு அதிசயித்தனர்.
ஆற்றலை நிரூபித்த சோவியத்
அன்றைக்கு, சோவியத் போன்ற பின்தங்கிய நாட்டில் புரட்சி நடக்குமா என ஐரோப்பிய நாடுகள் நினைத்தன. ஆனால், அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கும் வகையில், தோழர் லெனின் தலைமையில் புரட்சியை நடத்தி, சோவியத் நாடு அதன் ஆற்றலை நிரூ பித்தது. சோவியத் மற்றும் கம்யூனிச கொள்கை இல்லாததால், தற்போது ரஷ்ய நாட்டிலும் முத லாளித்துவ ஆட்சி நடக்கிறது. ரஷ்ய ஜனாதிபதி புடின் அமெரிக்காவுடன் நட்பு வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அமெரிக்கா ரஷ்யாவை அழிக்க திட்டமிடுகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. ரஷ்யாவுடன் உக்ரைன், நேட்டோ அமைப்பின் ஆதரவுடன் போர் நடத்திக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மீது அரங் கேற்றப்படும் இந்த மிக மோசமான தாக்குதல், மற்ற நாடுகளுக்கும் வர லாம். சோவியத் போன்ற சமூகம் இல்லையென்றால், அனைத்து நாடுகளுக்கும் இதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்தலில் ஏற்படும் வெற்றி தோல்வி மட்டுமே ஒரு நாட்டின் நலனை தீர்மானிப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் ஒன்றிரண்டு தோல்விகளால் மட்டுமே, அந்த இயக்கம் முற்றி லும் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. கார்ப்பரேட்டுகளின் எண்ணம் இன்றைக்கு, நவீன, பொருளா தார, தாராளமயக் கொள்கை களால் தொழிலாளர்கள், கிராமப் புற மக்கள் அவர்களது நிம்மதி யை இழந்து தவிக்கின்றனர். இதன் விளைவாக, அரசுத் துறைகள் மட்டுமின்றி பல்வேறு தனியார் துறைகளிலும் நிரந்தரப் பணி என்பது இல்லை. பெரும் பாலும் ஒப்பந்தத் தொழிலாளர் களாகவே பணியமர்த்தப்படு கின்றனர். இதன்மூலம் தொழி லாளர்கள், விவசாயிகளின் உரி மைகள் பறிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம் என வலது சாரிகளும் கார்ப்பரேட்டுகளும் நினைத்துக் கொண்டிருக்கின்ற னர்.
பாலமாகத் திகழும் தீக்கதிர்
எரிமலை வெடிக்கப் போவ தற்கான அறிகுறிகள்/மாற்றங்கள் வெளியில் தெரியாது. ஆனால், அது பூமிக்குள் ஆக்ரோஷமாக புழுங்கிக் கொண்டிருந்து, திடீ ரென ஒருநாள் தனது சக்தியை வெளிப்படுத்தும். அதே போன்று, இந்திய மக்களும் என்றைக் காவது தங்களது சக்தியை வெளிப்படுத்துவர். என்ன நடந்தாலும், ஜன நாயக அமைப்புகள் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக முதலா ளித்துவ சக்திகள், சாதிய அமைப்பு களையும், மத பிளவுவாதத்தை யும் தூண்டிவிடுகிறார்கள். ஆங்கிலேயர்களின் பிரித்தா ளும் சூழ்ச்சியைப் போன்று, இனி மேல் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. இதையெல்லாம் கடந் தே இந்தியா விடுதலையடைந்தது. இதுபோல் சோவியத்தும், மார்க்சியமும் முன்னேறும். இந்தியாவில் சோசலிசப் புரட்சி யை, அதற்கு முன் மக்கள் ஜன நாயகப் புரட்சியை மேற்கொள்ள அடிப்படையான, மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஒரு தொடர்பு ஆயுதமாக, பாலமாக தீக்கதிர் நாளிதழ் திகழ்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றி னார். நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, எஸ்.கண்ணன், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பர மேசுவரன், ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், தீக்கதிர் செய்தி ஆசிரியர் ப.முருகன், இடைக் கமிட்டி செயலாளர் ஜோ.ராஜ் மோகன், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக உதவி ஆசிரியர் சேது சிவன் தலைமையேற்றார். காசாளர் செல்வி நன்றி கூறினார்.