பேச்சுவார்த்தைக்கு முன்வந்த போதிலும் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்திருந்த நிலையிலும், 27 மாவோயிஸ்டுகளை, என்கவுண்ட்டர் மூலம் சத்தீஸ்கர் மாநில பாஜக அரசாங்கம் சுட்டுக் கொலை செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் நம்பலா கேசவராவ் உட்பட 27 மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது. பேச்சுவார்த்தை நடத்துமாறு மாவோ யிஸ்டுகள் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும் அவற்றைப் புறக்கணித்துவிட்டு, ஒன்றிய அரசும், பாஜக தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசும் அவர்களை மனிதாபிமானமற்ற முறை யில் அழித்தொழிப்புக் கொள்கை மூலமாகக் கொலை செய்துள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர், மீண்டும் காலக்கெடு விதிப்பதும், பேச்சுவார்த்தை தேவையில்லை என்ற சத்தீஸ்கர் முதலமைச்சரின் கூற்றும், மனித உயிர்கள் பறிப்பைக் கொண்டாடுவது போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பாசிச மனநிலையை பிரதிபலிக்கிறது. அரசியல் கட்சிகளும், பொறுப்புமிக்க குடிமக்களும், மாவோயிஸ்டுகளின் பேச்சு வார்த்தைக்கான கோரிக்கையை பரி சீலிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டு கோள் விடுத்திருந்தனர். மாவோயிஸ்டுகளின் அரசியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதே நேரம், பேச்சு வார்த்தைக்கான கோரிக்கையை உடனடி யாக ஏற்றுக்கொண்டு, மாவோயிஸ்டு களுக்கு எதிரான அனைத்துத் துணை ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திட வேண்டும் என்று அரசாங்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. (ந.நி