tamilnadu

img

உயரமாகும் எவரெஸ்ட் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கால் பதிப்பதை மனிதன் என்றும் ஒரு சாதனையாக கருதுகிறான். ஆனால் எவரெஸ்ட் வளர்வதால் வரும் காலங்களில் இது ஒரு கடினமான செயலாக மாறும். இமயமலை இந்திய துணைக் கண்டம் யுரேசியன் கண்டத் திட்டுடன் (Eurasian tectonic plate) மோதியபோது 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மோதலுக்கு முன்பே இந்த கண்டத் திட்டின் முனைகள் மிக உயரமாக இருந்தது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

மேல்நோக்கி வளரும் எவரெஸ்ட்

இந்த செயல்முறை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிலச்சரிவுகளும் மற்ற நிகழ்வுகளும் பாறைகளின் இழப்பிற்கு காரணமானாலும் இந்த மலைத்தொடர் தொடர்ந்தும் மேல் நோக்கி தள்ளப்படுகிறது. இப்போது 8,849 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட்  அதன் அருகில் உள்ள ஆறுகளின் அதிகரிக்கும் மண் அரிப்பினால் எவரெஸ்ட்டின் உயரம் கூடு கிறது. இந்த செயல்முறையால் கடந்த 89,000 ஆண்டுகளில் எவரெஸ்ட் 15 முதல் 50 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. இன்றும் இச்சிகரத்தின் உயரம் அதிக ரித்துக் கொண்டிருக்கிறது. “உலகின் உயர மான சிகரமாக எவரெஸ்ட் இருந்தாலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் புவியியல் செயல்முறை களால் இதன் உயரம் கணக்கிடும் வகையில் குறுகியகால புவியியல் அளவுகோல் மதிப்பு களின்படி பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலை புரிந்துகொள்ளமுடியாத ஒரு முரண்பாடு. இது இமாலயத்தின் மற்ற உயரமான மலை களை விட 250 மீட்டர் அதிக உயரம் உடை யது. எவரெஸ்ட்டின் நீண்டகால மற்றும் குறு கிய கால உயர அதிகரிப்புக்கு இடையில் முரண்பாடு காணப்படுகிறது என்று தரவுகள்  கூறுகின்றன. இந்த உயர்வுக்கு பின்னாலி ருக்கும் அடிப்படை செயல்முறை எவரெஸ்ட்டின்  முரண்பாடான உயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமா என்பது குறித்து கேள்வி எழுப்பு கிறது என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரி யரும் பெய்ஜிங் புவி அறிவியல் அகாடமி பல்க லைக்கழகத்தின் பேராசிரியருமான ஜிஞ்ஜன் டை  (Prof Jingen Dai) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை நேச்சர் புவி  அறிவியல் (Nature Geoscience) என்ற இத ழில் வெளிவந்துள்ளது. ஆய்வுக்குழுவினர் இமயமலை ஆறுகளின் அமைப்பின் பரி ணாமத்தை கணினி மாதிரிகள் கொண்டு ஆராய்ந்தனர். 89,000 ஆண்டுகளுக்கு முன் எவரெஸ்ட்டின் வடபகுதியில் திபெத்திய பீடபூமிக்கு கிழக்காக  ஓடியிருக்கக்கூடிய அருன் (Arun) ஆற்றின் மேற்பகுதி அதன் கீழ்ப்பகுதியுடன் இணைந்தது.  இதனால் வடக்கு நோக்கி அரிப்பு ஏற்பட்டது.

பூமியின் மேலோட்டில்  ஏற்படும் மாற்றங்கள்

ஆற்றின் முழு நீளத்திற்கும் இந்த மாற்றம் நிகழ்ந்ததால் அதன் முழுப்பகுதியும் கோசி (Kosi) ஆற்றின் பகுதியாக மாறியது. எவ ரெஸ்ட்டிற்கு அருகில் நிகழ்ந்த மண் அரிப்பி னால் ஆற்றின் திசை மாறி அது மறைந்து போயி ருக்கும் என்று கருதப்படுகிறது. அந்நேரத்தில் அருன் ஆற்றினால் உண்டான  மலை இடுக்கு நீர்வரத்து கூடுதலால் உருவாகி யிருக்கலாம். இது மேலும் அதிக வண்டலை இடம்பெயரச்  செய்து படுகைப்பாறைகளை அரித்து கீழுள்ள  பள்ளத்தாக்கின் அடிப்பகுதியை வெட்டியிருக்க லாம்” என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரி யரும் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி விஞ்ஞானியுமான டாக்டர் மாத்யூ ஃபாக்ஸ் (Dr  Matthew Fox) கூறுகிறார். பூமியின் மேலோட்டின் எடையில் ஏற்பட்ட குறைவினால் அகற்றப்பட்ட இது எவரெஸ்ட்டை சுற்றியுள்ள நிலப்பகுதியை உயரமாக்கியது. இந்த செயல்முறை பூமி அதன் மேலிருக்கும் பொருட்களால் அழுத்தப்படுவதால் அதன் மேலோடு தாழ்ந்து போவதை ஐஸோஸ்டாட்டிக் ரீபவுண்டு (isostatic rebound) என்று அழைக்கப்படுகிறது. இதனால் எவரெஸ்ட் ஆண்டுதோறும் 0.16 முதல் 0.53 மில்லி மீட்டர் வரை மேல்நோக்கி உந்தித் தள்ளப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோல எவரெஸ்ட்டிற்கு அருகில் இருக்கும் லாட்சே (Lhotse) மற்றும் மக்காலு  (Makalu) ஆகிய உலகின் நான்கு மற்றும்  ஐந்தாவது உயரமான சிகரங்கள் முறையே  வளர்கின்றன. இந்நிகழ்வு காலவரையறை யின்றி தொடர்ந்து நிகழாது. ஆற்றின் செயல் முறை ஒரு புதிய சமநிலைக்கு வரும்போது இது மாறும். “ஆற்று கவர்வு (River capture) அதனுடன் தொடர்புடைய நிலத்தோற்ற மாற்றங்களால் அதன் தலை திசை மாறுவது நன்கறியப்பட்ட ஒன்று. இது அரிதாகவே நிகழ்கிறது. இந்த கவர்வால் பூமியின் மேற்பகுதியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த உயர்வு இலண்டன் மாநகரின் ஒரு பகுதியையும் அத னைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் உள்ள டக்கிய கிரேட்டர் இலண்டன் என்று அழைக் கப்படும் நிர்வாகப் பரப்பிற்கு சமமான அளவு  ஏற்படுகிறது. இந்த வளர்ச்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒரு சில மில்லி மீட்டர் அளவே இருந்தாலும் வேகமாக நடைபெறுகிறது. வழக்கத்திற்கு மாறான எவரெஸ்ட்டின் இவ்வளர்ச்சி அங்கு நிகழும் மாற்றங்களின் ஒரு சிறிய பகுதியே. கண்டத் திட்டுகளின் அழுத்தத்தால் ஏற்படும் நிலநடுக்க சுழற்சி கள், பனிப்பாறை இழப்புகள் உயரத்தை அதி கரிக்கும்” என்று எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் மிக்கேயல் அட்டால் (Prof Mikaël Attal) கூறுகிறார். “இந்த கண்டு பிடிப்பு எவரெஸ்ட்டிற்கும் அப்பால் முக்கியத்து வம் வாய்ந்தது. இமயமலையில் வேறு பகுதிகளிலும் ஆற்றுக் கவர்வு நிகழ்கிறது என்பதால் இதே  போன்ற மாற்றங்கள் கண்டத் திட்டுகள் தீவி ரமாக செயல்படும் மற்ற பகுதிகளிலும் ஏற்படுகின்றனவா என்பதை விரிவாக ஆராயவேண்டும்” என்று டுரம் (Durham) பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் எலிசபெத் டிங்கல் (Dr Elizabeth Dingle) கூறுகிறார். எவரெஸ்ட் வளர்வதை குறித்த அறிவு பூமியில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.