எப்போதும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளவழகன் மாலை பள்ளிக்கூடம் விட்டதும் உடனே வீட்டிற்குக் கிளம்ப மாட்டார்.அரைமணி அல்லது ஒருமணி நேரம் கழித்தே புறப்படுவார்.அன்றும் அரைமணி நேரம் கழித்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார்.
வாயிற்புறம் இருக்கும் முக்கிய பெரிய கதவைத் தாண்டி சாலைக்கு வந்தபோது மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.அங்கே அவர் பார்த்த காட்சி திடுக்கிட வைத்தது. பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்களும் அவர்களோடு சீறுடை அணியாத இளைஞர்களும் இரண்டு கோஷ்ட்டியாக நின்று ஒருவரை ஒருவர் கற்களா லும்,கைகளாலும் தாக்கிக் கொண்டிருந்தனர். உடனே வண்டியை நிறுத்திவிட்டு சண்டை நடக்குமிடத்திற்கு வேகமாக ஓடினார்.அவரைக் கண்ட இரண்டு கோஷ்டிகளும் சிதறி ஓடினர். அதில் ஒரு மாணவன் மட்டும் இளவழகன் கையில் மாட்டிக்கொண்டான். அப்போது மழை அதிகமாகப் பெய்ய ஆரம்பித்தத்து.அதுபற்றிக் கவலைப் படாமல் கையில் கிடைத்த மாணவனை பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையின் கூரைக்கு அடியில் நின்று கொண்டு அவனை விசாரிக்க ஆரம்பித்தார். “டேய்…நீ எந்த வகுப்பு? உன் பேரு என்ன?” “அய்யா..நான் ஏழாம் வகுப்பு சி செக்ஷ்ன்ல படிக்கிறேன்.என் பேரு பாண்டியன்” “சரி… இங்கே என்ன சண்டை? ரெண்டு கோஷ்ட்டியா நின்னு அடிச்சிகிறீங்க.அதுல யூனிஃபார்ம் போடாத பெரிய பசங்களும் இருந்தாங்க..அவங்கள்லாம் யாரு? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார்.
“அய்யா..நேத்து சாயந்தரம் டியூஷன்ல என்ன என் கிளாசு ஆறுமுகம் டேய்….குண்டா என்று பட்டபெயர் வைத்துக் கூப்பிட்டான்.நான் அப்போதே சண்டை போட்டேன்.அவன் என்னை அடித்துவிட்டான்’என்றான். “சரி அடித்தான் என்றால் நீ டியூஷன் படிக்கிறியே அந்த ஆசி யர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே..இல்ல இன்னக்கி பள்ளிக்கூடம் வந்தவுடனே எங்கிட்ட சொல்லலாம்ல..அத விட்டுட்டு வெளியில ரௌடிப் பசங்க மாதிரி சண்டை போடறீங்க…சரி இவ்வளவு கூட்டம் எப்படி வந்தது? “அய்யா..என் அண்ணன் இங்கதான் பிளஸ் டூ படிக்கிறான் அவன் கிட்ட சொன்னேன். அவன் வந்து ஆறுமுகத்த அடிச்சிட்டான்.ஆறு முகம் வெளியில போயி அவுங்க ஆளுங்கள அழச்சிகிட்டு வந்துட்டான்.வெளியில இருந்த வங்க என் அண்ணனை அடிக்கும்போது அவ னோட படிக்கிற பையன்க எல்லாம் வந்து அவுங்கள அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று சொல்லும்போதே ‘இந்த சண்டை இதோடு முடியாது சாதிச் சண்டையா மாறி நாளைக்குப் பெரிய அளவில் கண்டிப்பாக நடக்கும் என்ப தைப் புரிந்து கொண்ட தலைமையாசிரியர் உடனே தன்னுடைய கைப்பேசியை எடுத்து காவல் நிலைத்திற்குப் ஃபோன் செய்தார். நடந்த விஷயத்தைச் சொல்லி இப்போதே இதற்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால நாளைக்கு இது பெரிய சாதிக் கலவரமாக மாறிவிடும்.நான் ஒரு பையனை மட்டும் பிடித்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னவுடனேயே பதட்டாமன ஆய்வா ளர்”சார்..அந்தப் பையனை விட்டுடாதீங்க உடனே இப்பவே வருகிறோம்”என்ற பத்து நிமிடத்திலேயே ஜீப்பில் நாலைந்து காவலர்களு டன் வந்து சேர்ந்தார் இளவழகன் பிடித்து வைத்தி ருந்த மாணவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தலைமையாசிரியரை காவல் நிலயத்திற்கு வரச்சொல்லிவிட்டுப் புறப்பட்டார். ஜீப் காவல் நிலையத்தை அடைவதற்குமுன் தலைமையாசிரியர் காவல் நிலையத்திற்குச் சென்றுவிட்டார்.உள்ளே மாணவனை அழைத்துச் சென்ற உடனேயே காவலர்களின் சடங்கு தொடங்கியது.ஆய்வாளர் அந்தப் பையனைக் குனிய வைத்து முதுகில் ஓங்கி ஒரு நாலைந்து குத்துகளை விட்டார்.வலி தாங்காமல் மாணவன் திணறினான். ”சார்…அடிக்காம விசாரிங்க”என்ற இளவழ கனைப் பார்த்துக் கோபத்தோடு”சார்…சும்மா இருங்க…ஒரு ஸ்கூல ஒழுங்கா நடத்தத் தெரி யல..பையன்க வெளியில கோஷ்டி சேர்ந்து அடிச்சிகிறாங்க…நீங்க பேச வந்துட்டீங்க” என்ற தும் தலைமையாசிரியர் இளவழகனுக்குக் கோபம் வந்துவிட்டது,
”சார்..கொஞ்சம் பொறுமையா பேசுங்க..இது நடந்தது வெளியில..அதுவும் பள்ளிக்கூடம் விட்டு ஒரு மணிநேரம் கழித்து..நான் பள்ளிக் கூடம் விட்டதும் வீட்டிற்குப் போயிருந்தால் இந்த சம்பவமே எனக்குத் தெரியாம போயிருக்கும்.நான் ஒருமணி நேரம் கழித்து பள்ளியை விட்டு வெளியே வந்ததால் எனக்குத் தெரிந்தது.அது மட்டுமல்ல வெளியில நடக்கிற சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று நினைத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் போயிருக்க லாம். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்கள் எங்கு பிரச்சனை யில் ஈடுபட்டாலும் அதில் தலையிட்டு பிரச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைப்பவன்,என்னைப் பற்றித் தெரியாமலேயே என் மீது குற்றம் சுமத்து வது எனக்கு மன வேதனையை அளிக்கிறது” என்று அவரும் கோபத்தோடு சொன்னதும் ஆய்வாளர் புரிந்து கொண்டார்.இவர் போலீசைப் பார்த்துப் பயப்படாதவர் என்று. அவரை வெளியே அழைத்து வந்து” சார்..கோவிச்சுக்காதீங்க.உங்களப் பாராட்டு றேன், நீங்க மட்டும் இதச் செய்யலேன்னா நாளைக்கு இது பெரிய சாதிக் கலவரமா மாறிடும்.ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் குறிஞ்சியிலேயும்,சாவடியிலேயும் நடந்து பெரிய லா அன்ட் ஆர்டர் பிரச்சனை ஆயுடிச்சி அதனாலத்தான் கோபப்பட்டேன்.அதே சமயம் ரெண்டு போடலேன்னா பயமிருக்காது மறுபடி யும் இதுபோல வேலையைச் செய்வானுங்க அதான்”என்று சொல்லிவிட்டு தலைமையாசி ரியர் தோளில் கைபோட்டு உள்ளே அழைத்து வந்தார். அதற்கு இடையில் டிஎஸ்பிக்கு ஃபோன் பண்ணி அவரும் வந்துட்டாரு.பிடிபட்ட பையனி டம் “யார் யார் இந்த சண்டையில் கலந்து கொண்டது என்று ஒழுங்கா சொல்லலேன்னா அடி பலமா இருக்கும் மரியாதையா சொல்லிடு’’ என்று டிஎஸ்பி சொன்னவுடன் ஒருசில பெயரைத் தவிர அனைவரின் பெயர் ஊர் எல்லாவற்றை யும் சொல்லிவிட்டான்.அடுத்த ஒரு மணி நேரத்தில் கையில் மாட்டிய ஐந்து பேரை ஜீப்பில் அழைத்து வந்தார்கள்.
அவர்கள் உள்ளே வந்தவுடனேயே நான்கு காவலர்கள் அவர்களைச் சூழ்ந்து சரமாரி யாக கையால் அடித்துவிட்டு அனைவரையும் முட்டிப் போட வைத்தனர்.அந்த நேரத்தில்தான் ஒரு கட்சியின் நகரச் செயலாளர் காவல் நிலை யத்தின் உள்ளே நுழைந்தவர் என்னைப் பார்த்து அய்யா வணக்கம் என்று சொல்லிவிட்டு கோப மாக ஆய்வாளரிடம் ”சார்…எங்க பையன அடிச்சிட்டாங்கன்னு சேதி வந்துச்சி..யாருன்னு சொல்லுங்க சார் நாங்க பாத்துக்கிறோம்’’ என்றார்.அந்த கட்சியின் நகரச் செயலாளர் தலைமையாசிரியரின் மாணவன் என்பதால்” டேய்…இது ஒன்னும் பெரிய விஷயமில்லடா..அவன குண்டன்னு சொல்லியிருக்கான் அதுல வந்த பிரச்சனைதான்.இத ஊதிப் பெரிசாக்கா தீங்க. ஸ்கூல் பசங்க சண்டை இன்னிக்கு அடிச்சிப்பாங்க நாளைக்குக் கூடிப்பாங்க.நீ போ நான் பாத்துக்கிறேன்” என்று சொன்ன வுடன்.’’ சரி..அய்யா’’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அதற்குள் மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டார்கள்.அவர்களிடம் டிஎஸ்பி “ உங்க பையன்க சாதாரண சண்டை யைச் சாதிக் கலவரமாக்க முயற்சி பண்றாங்க. இது சாதாரண விஷயமில்ல.இவர்கள் மேல எஃஐஆர் போட்டு கடலூருக்கு அனுப்பப் போறேன்,அதோட உங்க பசங்க வாழ்க்கைப் பாழாய்ப் போயிடும் புரிஞ்சிகிங்க’’ என்றவுடன்.எல்லோரும் கையெடுத்துக் கும்பிட்டு” அய்யா அப்படியெல்லாம் செய்துடாதீங்க உங்க கால்ல உழுந்து கேக்குறோம்.இனிமே இதுபோல நடந்துக்க மாட்டாங்க”என்று சொன்னதை ஏற்று “ எல்லோரும் கைப்பட எழுதிக் கொடுங்க”என்று சொல்லி அனை வருக்கும் வெள்ளைத்தாளைக் கொடுத்து எழுதச் சொன்னார்.எழுதியதில் அந்தந்தப் பைய னுடைய தந்தை மகன் இருவரிடமும் கையெ ழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்.அப்போது மணி இரவு பன்னிரெண்டு.
தலைமையாசிரியரைப் பாராட்டிய டிஎஸ்பி “நாளைக்கு உங்க ஸ்கூல்ல ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க நான் வந்து பேசறேன்” என்றார்.”ரொம்ப மகிழ்ச்சி சார் கண்டிப்பா மீட்டிங் ஏற்பாடு பண்ணிடறேன்,நீங்க நாளைக்கு மூனு மணிக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார். மறுநாள் நடந்த கூட்டத்தில் டிஎஸ்பி சாதி, மத வேறுபாடுகளினால் வரும் துன்பங்களை யும்,மனித நேயத்தைப் பற்றியும் அழகான கருத்தாழமிக்க உரையை நிகழ்த்தினார்.அப்போது” டியூஷனில் படிக்கும் இரண்டு பேரில் ஒருவன் இன்னொருவனைப் பட்டப் பெயர் வைத்துக் ‘குண்டன்’ என்று சொன்னது எவ்வளவு பெரிய சாதிச் சண்டையாக மாற இருந்தது. நல்ல வேளையாக உங்கள் தலைமை யாசிரியர் தலையிட்டதால் பெரிய அசம்பா விதம் தவிற்கப் பட்டது”என்று கூறியவர் ஒரு சால்வையை எடுத்துத் தலைமையாசிரிய ருக்குப் போர்த்தினார்.மாணவர்களின் கை தட்டல் அடங்க நீண்ட நேரமாயிற்று.இப்போது அந்தப் பள்ளியில் பத்தாண்டுகள் ஆன பின்னும் எந்தவித சாதி,மதப் பிரச்சனை கள் வந்ததில்லை.அதற்கு அந்தத் தலைமை யாசிரியரின் இடதுசாரிப் பார்வையே கார ணம்.