மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய புதிய கருவி
இரண்டு இளைஞர்கள் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் கருவியை முழுவதும் சுயேச்சையான தொழில் நுணுக்கத்தில் வடிவ மைத்துள்ளனர். விவேக் பிரகாஷ் மற்றும் கவுரவ் லோஹியா நவம்பர் 2022இல் டோபர் எனும் நிறுவ னத்தை தொடங்கி இதை சாதித்துள்ளனர். இந்த கருவி உலக தரத்திலானது; எளிமையானது மட்டுமல்ல சுற்றுச்சூழ லுக்கு தீங்கு விளைவிக்காதது என்கின்றனர். கவுரவ், மெஷின் லேர்னிங் போன்ற கணினித் துறை யிலும் விவேக், நிலைத்த சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டு துறையிலும் அனுபவம் உள்ளவர்கள். அவர்களது கருதுகோளை (proof of concept)எழுதுவதற்கு ஒரு வாரமே ஆனது. ஆனால் கருவியை வடிவமைப்பதற்கு ஒரு வருடம் ஆனதாம். ஒரு தொழில்நுணுக்க பிரச்சனை யினால் கருவி இயங்கவில்லை. பின்னர் மென்பொருள், வன்பொருள் மற்றும் இரண்டையும் இணைக்கும் ஃபர்ம்வேர் ஆகியவற்றிற்கு தனித்தனியாக ஆலோசகர்களை நியமித்து சிக்கலை தீர்த்தனராம். ஏசி, டிசி ஆகிய இரண்டு வகை மின்னேற்றமும் 3.3கிவோ இலிருந்து 60 கிவோ வரையான வாகன மாடல்களுக்கும் இதனால் சார்ஜ் செய்ய முடியுமாம். தற்போது டெல்லியை சுற்றி 12 நிலையங்கள் இயங்குகின்றன. நாடு முழுவதும் இதை விரிவுபடுத்த உள்ளார்கள். குடியிருப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் கருவியை விற்பனையும் செய்கின்றனர். கூகுளின் மேனாள் பொறியியலாளரும் மிகவும் அறியப்பட்ட முதலீட்டாளருமான பீட்டர் நார்வுட் இதில் முதலீடு செய்துள்ளார்.
தாவரங்கள் ஓலமிடுமா?
மனிதர்கள் போல் தாவரங்களும் அழுத்தத்திற்கு ஆட்படும்போது அலறுகின்றன. ஆனால் அவை எழுப்பும் ஒலி நமது கேட்கும் திறனுக்கு அப்பால் உள்ளது. தாவரங்கள் பூச்சிகளுடனும் விலங்குகளுட னும் எப்போதும் ஊடாடிக்கொண்டே இருக்கின்றன. அந்த உயிரினங்கள் தொடர்புக்கு ஓசையையே பயன்படுத்து வதால் தாவரங்களும் அதைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். ஆபத்தில் இருக்கும்போது ஓசை மட்டுமல்ல, வலுவான வாசனை, நிறம், வடிவம் ஆகியவற்றின் மூலம் மற்ற தாவரங்களுக்கும் தெரிவிக்கின்றன. தங்களது சொந்த பாதுகாப்பை அதிகரிப்பது அல்லது விலங்கு களை ஈர்த்து தங்களை தாக்கும் கிருமிகளை சமா ளிக்கின்றனவாம். சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் தாவ ரங்கள் ஒலியை அறிய முடியும் என்று காட்டப்பட்டது. இப்போது அவை ஒலியை எழுப்ப முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டது. தக்காளி மற்றும் புகையிலை தாவ ரங்கள் சாதாரண நிலையிலும் நீர் வற்றிய நிலை மற்றும் தண்டு ஒடிக்கப்பட்ட நிலை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டன. ஒலி தடுக்கப்பட்ட அறையிலும் சாதாரண பசுமைக் குடிலிலும் இவை பதிவு செய்யப்பட்டன. ஒரு அல்கோரிதம் மூலம் மூன்று அளவுகளும் ஒப்பிடப்பட்டன. அழுத்தம் இல்லாத தாவரங்கள் எந்தவித ஒலியையும் எழுப்பவில்லை. மற்ற இரண்டும் ‘கிளிக்’ ‘பட்’ போன்ற ஒலிகளை எழுப்பின. மற்ற தாவரங்களிலும் இதே சோதனை நடத்தப்பட்டது. இந்த ஒலி எழுப்புதல் தாவரங்களின் பொது வான குணமாகத் தெரிகிறது. கிருமிகள் தாக்குதல், புற ஊதாக்கதிர், மிகை வெப்பம் போன்ற கேடுகளும் தாவரங்களில் ஒலி எழுப்புவதை தூண்டுமா என்று தெரியவில்லை. எவ்வாறு அவை ஒலி எழுப்புகின்றன என்பதும் அறியப்படவில்லை. நமது மூட்டு களில் காற்று வெளியேறும்போது ஓசை எழுவது போல் அவற்றின் தண்டுகளிலும் காற்றுக் குமிழிகள் உண்டாகி பெரிதாகி வெடிக்கலாம். மனிதர்களைப் பொறுத்தவரை தண்ணீர் தேவைப்படும் தாவரங்களின் ஓசையைக் கேட்டு நீர் பாய்ச்சலாம் என்பதே நடைமுறைப் பயன்பாடு. இந்த ஆய்வு ‘செல்’ இதழில் வந்துள்ளது.
தனியார் ஜெட் புகையும் புவி வெப்பமாதலும்
புவி வெப்பமாதல் குறித்து அசர்பைஜானிலுள்ள பகு மாநாடு விவாதிக்க உள்ள நிலையில், தனியார் விமான பயணம் வெளிவிடும் கார்பன் உமிழ்வு 2019க்கும் 2023க்கும் இடையில் 46% உயர்ந்துள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது. அதிக பணம் படைத்தவர்களும் பிரபலங்களும் பயன்படுத்தும் தனியார் ஜெட் விமானங்கள் அதிக அளவு எரிபொருளை பயன்படுத்துபவை. 2023இல் மட்டும் இவை 15.6 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை வெளி யிட்டுள்ளன என்கிறார்கள் சுவீடன், டென்மார்க் மற்றும் ஜெர்மன் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வா ளர்கள். பொதுப் போக்குவரத்து விமானங்கள் வெளிவிடும் மொத்த கார்பன் உமிழ்வில் இது 2%க்கும் குறைவானது என்றாலும் இதில் பயணம் செய்பவர்கள் 2,56,000 நபர்களே. இது உலக மக்கள் தொகையில் 0.003%. ஆகவே ஒரு நப ருக்கு கணக்கிடும்போது இது மிக அதிக கார்பன் உமிழ்வா கும். 2019-2023 இடையில் நடைபெற்ற 18.7 மில்லியன் தனி நபர் ஜெட் பயணங்களை ஆய்வு செய்ததில் கீழ்க்கண்ட விசயங்கள் தெரியவந்துள்ளன. 1. பாதிக்கும் மேற்பட்ட பயணங்கள் 500 கிமீக்கும் குறை வான தூரமே. 2. பல முறை யாரையாவது அழைப்பதற்கோ அல்லது எதையாவது கொடுப்பதற்கோ செய்யப்பட்டவை. ஆகவே காலியாகவே சென்றன. 3. நேரத்திற்காகவும் வசதிக்காகவும் காருக்கு மாற்றாக இவை பயன்படுத்தப்படுகின்றன. 4. மூன்றில் இரண்டு பங்கு தனியார் ஜெட்கள் அமெரிக்காவிலேயே உள்ளன. 5. இதில் பயணம் செய்வோர் சராசரியாக 123 மில்லி யன் டாலர் சொத்துடையவர்கள். 6. உலக விளையாட்டுப் போட்டிகள், அமெரிக்க கால்பந்து போட்டிகள், உலக பொருளாதார மாநாடு , காலநிலை மாற்ற மாநாடு, கோடைகாலங்களில் சொகுசு இடங்க ளுக்கு செல்லுதல் ஆகியவற்றின்போது தனியார் ஜெட் பயணங்கள்அதிகம் செய்யப்படுகின்றன. 2033க்குள் இவை 33%அதிகரிக்கும். மேலும் நீண்ட காலப் பயன்பாடு எரிபொருளை இவர்கள் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்பதால் இத்துறையை நெறிப் படுத்த வேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். வசதியானவர்கள் மற்றும் அதிகாரத்திலுள்ளவர்கள் மீது கைவைக்க அரசு கொள்கை வகுப்பாளர்கள் தயங்கு கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆய்வு ‘ Communications Earth & Environment’ எனும் இத ழில் வெளிவந்துள்ளது.