மதுரை:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திரைப்பட நடிகர் விவேக்கிற்கு சனிக் கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த நடிகர் விவேக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1978 -1981 ஆண்டு பிகாம் படித்தவர். தான் படித்த கல்லூரி என்பதால் அமெரிக்கன் கல்லூரியின் அழைப்புகளை மறுக்காமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். அவரது மறைவையொட்டி அமெரிக்கன் கல்லூரியில் விவேக் உருவப்படத்திற்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும்அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் பேராசிரியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.அப்போது செய்தியாளர்களிடம் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறியது: எங்கள் கல்லூரி மாணவரான விவேக் மறைவு ஈடுசெய்ய இயலாதது. அவர் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவர் நட்டு வைத்த மரங்களில் காற்றாக வாழ்ந்து கல்லூரியில் நினைவாக இருப்பார் என்றார்.அவரது கல்லூரி நண்பர் முகில் பேசுகையில், “நண்பனின் இழப்பு ஏற்கமுடியவில்லை, திரைப்பட இயக்குநராக வருவார் என எதிர்ப்பார்த்தோம், ஆனால் இவ்வளவு விரைவாக தனது வாழ்வைமுடிப்பார்” என்பதை ஏற்க இயலவில்லை என்றார்.